காய்கறிகள் மற்றும் பழங்கள் மேல் ஏன் ஸ்டிக்கர் (Sticker) ஒட்டப்படுகிறது?


காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கும் போது அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். இது ஒரு சாதாரண விடயம் எனவே பலரும் கருதுகின்றனர். எனினும் அதன் உண்மையான நோக்கம் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொள்தல் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும்  இந்த காய்கறி மற்றும் பழங்கள் எவ்வாறு  உற்பத்தியாகின்றன என்பது பற்றி அறிந்தால் ஆச்சரியமடைவீர்கள். மரபணு மாற்றம் செய்யப்பட காய்கறி, பழங்கள், நச்சுக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள் என பல வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை கண்டறிய தான் பி.எல்.யு எனும் குறியீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது.

பி.எல்.யு (PLU) என்பது “Price Look Up” number எனப்படுகிறது. நாம் வாங்கும் காய்கறிகள் பழங்களில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டுள்ளனவா? மரபணு மாற்றம் செய்யப்பட்டதா? அல்லது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை இந்த பி.எல்.யு குறியீட்டு எண்களை வைத்து எளிதாக கண்டறிந்துவிடலாம். காய்கறி, பழங்களில் இந்த நான்கு இலக்க குறியீடு இருந்தால் அது வழக்கமான முறையில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என குறிக்கிறது. குறிப்பாக இவ்வகையான வாழைப்பழங்களில் “4011” என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நீங்கள் வாங்கும் காய்கறி பழங்களில் 8-ல் துவங்கும் ஐந்து இலக்க குறியீட்டு எண் இருக்கிறது எனில், அது மரபணு மாற்றம் செய்யப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறி பழங்கள் என குறிக்கிறது. நீங்கள் வாங்கும் காய்கறி பழங்களில் 9-ல் துவங்கும் ஐந்து இலக்க பி.எல்.யு குறியீடு எண் இருந்தால் அது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப் பொருள் ஆகும். குறிப்பாக இவ்வகையான வாழைப்பழத்தில் “94011” என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இனிமேலும் நீங்கள் கடைகளில் காய்கறி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் போது அதை பற்றி அறிந்து கொண்டு வாங்குங்கள்.

இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி உணவுகளை தொடர்ந்து உற்கொள்வதால் காலப்போக்கில் புற்றுநோய் கூட உருவாக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

أحدث أقدم