மூட்டு வலிக்கு இலகுவான 5 பாட்டி வைத்திய குறிப்புகள்.


தற்போதுள்ள சூழ்நிலையில் ஒருவர் 30 வயதை தாண்டியதும் மூட்டு வலி ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே இலகுவாக நிவாரணம் வழங்கிவிடலாம்.

கீழே உள்ளவற்றில் எதையாவது ஒன்றை முயற்சித்தாலே போதுமானது, உங்கள் மூட்டுவலிக்கு நல்ல பலன் பலன் கிடைக்கும்.

குறிப்பு 01:
ஒரு டீஸ்பூன் கருப்பு எள்ளை இரவு முழுவதுமாக தண்ணீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனை செய்தல் மூட்டு வலி குறைந்துவிடும்.

குறிப்பு 02:
1/2 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை பழ சாறும், ஒரு டீஸ்பூன் தேனும் இட்டு நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

குறிப்பு 03:
1 மேசைக்கரண்டி பசிப்பயறை 2 பூண்டுப் பற்களுடன் நன்றாக வேகவைக்க வேண்டும். இதனை சூப் வடிவில் ஒருநாளைக்கு இரண்டு தடவைகள் சாப்பிட்டு வர மூட்டு வலி குறைந்துவிடும்.

குறிப்பு 04:
முடக்கத்தான் இலையினை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறைந்து விடும். மூட்டு வலிக்கு ஓர் சிறந்த மருந்தாக முடக்கத்தான் கருதப்படுகிறது. முடக்கத்தான் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து உணவில் கலந்து உண்டுவரலாம். வாரத்துக்கு இரண்டு முறை முடக்கத்தான் கலந்த உணவை சாப்பிட்டு வந்தால் போதும், மூட்டு வலி காணாமல் போய்விடும்.

குறிப்பு 05:
மூன்று ஏலக்காய்களை நறுக்கு சூடான பாலில் இட்டு, கொஞ்சம் மஞ்சள் பொடியையும் சேர்த்து தினமும் இரவு நேரங்களில் குடித்துவர மூட்டு வலி குறையும்.
أحدث أقدم