உடல் எடை குறைக்கும் 3 எளிய உணவுகள் | Weight Loss


1. எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றினை தண்ணீருடன் கலந்து பருகுவதால் நமது உடலில்  பல நன்மைதரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. விட்டமின் C (அஸ்கார்பிக் அசிட் - ascorbic acid) எலுமிச்சை சாற்றில் அதிகளவிலேயே காணப்படுகிறது. இது உடல் இழையங்களின் வளர்ச்சி, விருத்தி மற்றும் பழுதுபட்ட இடங்களை சீரமைப்பதில் மிக முக்கிய பங்குவகிக்கிறது. அத்துடன் இரும்புச்சத்தினை உறிஞ்சுதல் மற்றும் நோய் எதிர்ப்பிலும் உதவிபுரிகிறது.

எனவே விட்டமின் C அதிகம் கொண்ட எலுமிச்சை சாற்றினை பருகுவதால், உடல் இழையங்கள் சீரமைக்கப்பட்டு உடல் எடையும் சீராக்கப்படும்.


2. காய்கறிகளின் சாறு:
காய்கறிகள் பொதுவாக உடலுக்கு மிகவும் நன்மைபயக்கும் பல போசனைக் கூறுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் ஜூஸ் சுவையற்றதாக இருந்தாலும் இதனால் உடலுக்கு ஏராளமான பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் நார்ச்சத்து, விட்டமின்கள், கனியுப்புக்கள், நோய் எதிர்ப்பு என சிலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். அதில் காய்கறிகளின் முக்கியமான ஒரு பணி தான் அளவுக்கு அதிகமான உடல் எடையினை சீரமைப்பதும்.

இஞ்சி, காளான், தக்காளி, வெள்ளரிக்காய், கேரெட், ப்ரோகோலி, பீட்ரூட், பாகற்காய் என நீங்கள் தேர்தெடுக்கும் காய்கறியானது மாச்சத்து குறைந்த / அற்றதாக (non-starchy vegetables) இருக்க வேண்டும். இக்காய்கறிகளின் சாற்றினை நீங்கள் இலகுவாகத் தயாரித்துக்கொள்ள முடிவதோடு, காலை உணவுக்கான மாற்றீடாகவும் இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.


3. பப்பாளி :
பப்பாளி என்பது பலருக்கும் விரும்பும் ஓர் பழ வகையாகும். இது உட்கொண்ட உணவின் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி உங்கள் உடலின் வெளித்தோற்றத்தையும் மெருகூட்டி அழகுபடுத்தும். மேஜிக் என்சைம் (நொதி) எனப்படும் பப்பைன் (Papain) நொதி பப்பாளியில் காணப்படுவதனால் பப்பாளிப் பழத்தினை உற்கொள்வதால் உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கின்றன.

உடலுக்கு தீங்குவிளைவிக்கும் கொழுப்புகளை கரைப்பதிலும் நச்சுப் பதார்த்தங்களை அகற்றுவதிலும் பப்பாளி பெரிதும் உதவிபுரிகிறது. இதனால் உடல் எடையானது சீரமைக்கப்படுகிறது.
Previous Post Next Post