தலை முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள் | Health Tipsநம்மில் பலரும் அடர்த்தியான மற்றும் நேர்த்தியான தலை முடி வேண்டும் என்றே ஆசைப்படுகிறோம். இதற்காக நம்மில் பலர் தினமும் தலை முடிக்கு என சற்று நேரத்தையும் ஒதுக்குகிறோம். தலை முடியை பராமரிக்க பல வகையான ஷாம்புகளை உபயோகப்படுத்துகிறோம். தலை முடி ஒருவரின் முகத்தையும், தோற்றத்தையும் வெளிக்காட்டும் ஓர் முக்கிய அங்கமாகக் காணப்படுகிறது. இதனாலேயே இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, அனைவரும் தங்கள் தலை முடியை இந்தளவிற்கு பராமரிகின்றனர்.

ஒருவரின் தலை முடியானது பல்வேறு பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பாதிப்புக்குள்ளாகின்றது. இவற்றில்,

- ஒருவரின் வயது.
- பரம்பரை.
- வைட்டமின் குறைபாடு.
- புரத குறைபாடு.
- ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம்.
- குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி.
- ஓமோன்களினால் ஏற்படும் பிரச்சினைகள்.
- மன அழுத்தம்.

மற்றும் இதுபோன்ற மேலும் பல காரணிகளைக் குறிப்பிடலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட காரணிகளினால் பாதிப்புக்குள்ளான தலை முடியினை குறிப்பிடத்தக்க அளவில் வெங்காயத்தை உபயோகித்து சீர்செய்யலாம்.


தலை முடி வளர ஏன் வெங்காயத்தை பயன்படுத்த வேண்டும்?
வெங்காயச் சாற்றில் அதிகளவில் காணப்படும் சல்பர், திசுக்களில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் தலை முடி மீண்டும் வளர இது உதவிபுரிகிறது. தலை முடி வளர வெங்காயத்தை பயன்படுத்தும் இம்முறையானது தலை முடியினை அடர்த்தியாக வளரவைக்க உபயோகப்படுத்திய மிகவும் தொன்மையான மற்றும் சிறந்த  வீட்டு வைத்திய முறையாகும்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தலாம்?

தேவையான பொருட்கள்:
- இரண்டு சிவப்பு வெங்காயங்கள்.
- பருத்திப் பந்து அல்லது ஸ்பான்ஜ்.

பயன்படுத்தும் முறை:
- வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.
- பின்பு அவற்றை நன்கு அரைத்து அதன் சாற்றினை நன்றாக கசக்கிப் பிழிந்துகொள்ளுங்கள்.
- பிழிந்த சாற்றினை பருத்திப் பந்து அல்லது ஸ்பான்ஜ் கொண்டு கவனமாக உங்கள் தலையில் தடவிக்கொள்ளுங்கள் (முக்கியமாக தலை முடி குறைந்த பகுதிகளில்).
- 15 நிமிடம் கழித்து இதனை இலேசான ஷாம்பு கொண்டு கழுவி விடுங்கள்.

இதனை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தொடர்ச்சியாக செய்துவர தலை முடி குறைந்த இடங்களில் தலை முடி வளர்ந்து தலை முடி அடர்தியாகக் காட்சியளிக்கும்.
தலை முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள் | Health Tips தலை முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள் | Health Tips Reviewed by மருத்துவ உலகம் on December 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.