15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.


15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கல், வாயுத் தொல்லையை இல்லாதொழிக்க இலகுவான வீட்டு வைத்தியம்..

நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவிலே தான் உள்ளது.  நமது வயிறு உள்ளிட்ட சமிபாட்டுத் தொகுதி சரிவர தொழிட்படாவிட்டால்  உடலின் ஏனைய பகுதிகளையும் அது பதிப்படையச் செய்யும்.

வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படும் போது சில அறிகுறிகளை அது வெளிக்காட்டும். வாய் துர்நாற்றம் வீசத் தொடங்கும், மலம் கழித்தல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வயிற்றில் பூச்சி புழுக்களின் தொல்லை போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.

வயிற்றில் ஏற்படும் இப்படிப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யும் ஓர் இலகுவான வீட்டு வைத்தியம் பற்றி இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
- 1 டம்ளர் வெதுவெதுப்பான நீர்.
- கறியுப்பு.
- விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்).
- எலுமிச்சை பழம் (1 பாதி)

செய்முறை:
1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 1/4 ஸ்பூன் காரியுப்பு, 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1 பாதி எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.

இப்பொழுது பானம் தயாராகிவிட்டது. இதை வாரம் ஒருமுறை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இதை அருந்தும் முன், 1/2 டம்ளர்தண்ணீரை அருந்திக்கொள்வது நல்லது. இதை குடித்து 15 நிமிடங்களில் வயிறு சுத்தமாக ஆரம்பித்துவிடும். இதை 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 1/4 கிளாஸ் அளவில் கொடுக்க முடியும்.

இதை வாரம் ஒருமுறை அருந்தினால் மலச்சிக்கல் இருக்காது, வாயுத்தொல்லை ஏற்படாது மற்றும் பூச்சி புழுக்கள் வயிற்றில் தங்காது. 
Previous Post Next Post