தாங்க முடியாத பல்வலிக்கு விரைவான நிவாரணம் | Dental Health


பல் சம்பந்தப்பட்ட பல்வேறு விதமான நோய் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வலி ஏற்படுகிறது. பல்வலிக்கான பொதுவான காரணிகளாக பல் சொத்தை, பல் விழுதல், பல் முளைத்தல்,  ஈறுகளில் பிரச்சினை மற்றும் தேய்வு போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம். இலேசான பல்வலியைத் சகித்துக்கொள்ள முடியுமெனினும், பல்வலி தீவிரமாக ஏற்படும் சந்தர்ப்பங்களில் சிலரால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் போகிறது.

இவ்வாறு பல்வலியின் தன்மை தீவிரமடையும் போது இயற்கை முறையினைப் உபயோகித்து வலியினை விரைவில் குறைத்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:
  • தண்ணீர்
  • மிளகு
  • உப்பு
  • கிராம்பு (இலவங்கம்).
  • தேங்காய் எண்ணெய்

செய்முறை:
மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து தூள் செய்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் ஓர் சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், உப்பு, கிராம்பு தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போன்று தயாரித்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
பற்தூரிகையைப் பயன்படுத்தி நீங்கள் தயாரித்துக்கொண்ட அந்தப் பசையை பற்களில் வலி உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரத்தின் பின் தண்ணீரினால் வாய்கொப்பளிக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து பற்களில் ஏற்பட்டுள்ள வலி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிடும். மேலும் இதனால் பல் ஈறுகளின் ஆரோக்கியமும் பேணப்படும்.

Previous Post Next Post