ஆரோக்கிய வாழ்வுக்கான 5 ஆரோக்கியக் குறிப்புகள் | Health Tips


1. தினசரி உடற் பயிற்சி: 
தினமும் காலையில் எழுந்தவுடன் உடற் பயிற்சி செய்து பழகுங்கள். உடற்பயிற்சியானது, உடலில் சுற்றோட்டத்தினை சீராக்கும், சமிபாட்டில் உதவும், முதுகு வலி வராமல் தடுக்கும்.

2. காலை உணவை தவறாதீர்கள்:
ஆய்வுகளின் படி உங்கள் எடையினை சீராக பேண முறையான காலை உணவு மிக அவசியமானது. காலை உணவை தவிர்த்து மற்றைய வேளைகளில் மட்டும் உணவருந்துவது உடல் எடையினை வெகுவாக அதிகரிக்கச் செய்கிறது. புதிய பழங்கள், பழச்சாறு, நார்ச்சத்துள்ள காய்கறிகள், குறைவான கொழுப்புடைய பால், தயிர், அவித்த முட்டை என்பன சமநிலையான காலை உணவுக்கு சிறந்த உதாரணமாகும்.

3. முறையாக பல் துலக்குங்கள்:
அநேகமானோர் சரியான முறையில் பல் துலக்குவதில்லை. பல் துலக்கும் போது கண்டவாறு தூரிகையினால் மேலும் கீழும் இழுப்பதினால் பற்கள் மற்றும் முரசு பல்துலக்காததை விட வெகுவாகப் பாதிப்படைகின்றன. உங்கள் பற் தூரிகையை சுத்தமாக வைத்திருங்கள். அத்துடன் குறைந்தபட்சம் 2 நிமிடங்களேனும் பல் துலக்குங்கள்.

வருடத்தில் ஒருமுறையேனும் உங்கள் பல் வைத்தியரை அனுகி உங்கள் பற்களை பரிசோதித்துக்கொள்ளுங்கள். அத்துடன் பல்துலக்கும் முறை பற்றியும் கற்றுக்கொள்ளுங்கள்.

4. உறுதியான எலும்புகள் மற்றும் பற்கள்:
பற்கள் மற்றும் எலும்புகள் உறுதிபெற உடலுக்கு கல்சியம் மிகவும் அவசியமானது. பால், தயிர், யோகட் போன்ற பால் உற்பத்திகளில் அதிகம் கல்சியம் காணப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 200 மில்லிகிராம் கல்சியம் உடம்பிற்கு தேவைப்படுகிறது.

5. துரித உணவுகளை (Junk Foods) தவிருங்கள்:
Junk Foods எனப்படும் துரித உணவுகளே நவீன உலகின் பல்வேறு விதமான நோய்களுக்குக் கரணம் என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துரித உணவுகளை அதிகம் உற்கொள்தலினால் உடல் எடை அதிகரிப்பு, இருதய நோய்கள், நீரிழிவு, புற்று நோய்கள் மற்றும் பல சுகாதாரப் பிரச்சினைக்கு இவை வழிவகுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post