மலச்சிக்கல் - காரணிகள், அறிகுறிகள், தடுத்தல் | Constipation


மலச்சிக்கல் என்பது மலம் கழிப்பதில் உங்களுக்கு ஏற்படும் சிரமம் அல்லது இயல்பை விட குறைவாக மலம் கழிக்கும் வேட்கை குறைந்து செல்லலாகும் . பொதுவாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நீங்களும் இதுபோன்ற நிலைமையை உணர்ந்திருப்பீர்கள்.

சாதாரணமாக, மலம் வெளியேற்றும்  காலம் மற்றும் அவற்றுக்கிடையேயான கால இடைவெளி ஒவ்வொருவருக்கும் தனித் தனியே வேறுபடலாம். சிலர் தினமும் இரண்டுஅல்லது மூன்று முறையும், மற்றவர்கள் வாரத்திற்கு சில முறை மட்டும் மலம் கழிப்பார்கள்.

எனினும், மூன்று நாட்களுக்கு மேல் மலம் கழிக்காமல் இருப்பது ஒரு சாதாரண நிலைமை அல்ல. மூன்று நாட்களை தாண்டும் போது மலம் கழித்தலை சற்று சிரமத்துடனே செய்ய வேண்டியேற்படும்.

மலச்சிக்கலின் அறிகுறிகள் என்ன?

- வழக்கத்தை விட சிறிதளவு மட்டும் மலம் வெளியேறுதல்.
- மலம் கழித்தலில் சிரமம் (மலம் வெளியேற்ற  சிரமப்படுதல்).
- கடினமான மற்றும் அளவில் சிறிய மலம் வெளியேற்றம்.
- எல்லாம் வெளியே வரவில்லை என்ற உணர்வு.
- தொப்பை வீக்கம்.

சிலவேளைகளில் மலம் வெளியேற்ற உங்கள் வயிற்றை அழுத்துவது, அல்லது விரல்களால் மலத்தை அகற்ற வேண்டும் போன்ற உணர்வு ஏற்படுத்தலும் மலச்சிக்கலின் வெளிப்பாடாகவே அமைகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான சில காரணங்கள்:

- தினசரி உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள்.
- போதியளவு நீர் அருந்தாமை.
- உணவில் போதியளவு நார்ச்சத்து இல்லாமல் இருத்தல்.
- உடல் சுறுசுறுப்பின்மை.
- மலம் கழிக்கும் தேவையேற்பட்டும், மலம் கழித்தலை தவிர்த்தல்.
- சமிபாட்டுத் தொகுதியுடன் தொடர்புடைய நோய்நிலைமைகள்.
- கர்ப்பம் தரித்தல்.
- மன அழுத்தம்.
- சில மருந்து வகைகளின் பயன்பாடு.

மற்றும் இதுபோன்ற சில காரணங்களை குறிப்பிடலாம்.

மலச்சிக்கலை தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

- தினமும் இரண்டு முதல் நான்கு டம்ளர் நீரினை கூடுதலாக பருகுங்கள்.
- தினமும் காலையில் வெதுவெதுப்பான நீர் அல்லது பானங்களை பருகுங்கள்.
- முடிந்தளவு உங்கள் உணவில் போதுமானளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
- அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- மலம் கழிப்பதற்கான தேவை ஏற்படும் போது, அதனை தவிர்க்க வேண்டாம்.
Previous Post Next Post