ஒவ்வாமை (Allergies )


 ஒவ்வாமை என்றால் என்ன?

உடம்பினால் ஒத்துக் கொள்ளாத எதுவும் ஒவ்வாமையாகக் கருதப்படும். ஒவ்வாமையின் பொதுவான அறிகுறிகளாக,

  • உடல் பாகங்களில் வீக்கம் / தடிப்பு.
  • அரிப்பு.
  • மூச்சு விடுதலில் சிரமம்.
  • தும்மல்.
  • இருமல்.
  • கண்கள் சிவத்தல்/அரிப்பு.
  • வயிற்றுளைவு.
  • வாந்தி.
  • வயிற்றோட்டம்.
  • மனநிலை மாற்றம்.

மற்றும் இதுபோன்ற நோய் நிலைமைகள் ஏற்படலாம். ஒவ்வாமையின் காரணியைப் பொருத்து அதன் தன்மையும் கூடிக் குறையலாம்.

ஒவ்வாமைக்கான பொதுவான சிகிச்சைகள்:

1. அன்டிஹிஸ்டமின் (Antihistamines)

ஒவ்வாமையின் அறிகுறிகளினால் ஏற்படும் சிரமங்களில் இருந்து விடுபட அன்டிஹிஸ்டமின்கள் எனும் மருந்துவகைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அன்டிஹிஸ்டமின்கள் பொதுவாக மாத்திரைகள், சொட்டுமருந்து, தெளிப்பான்கள் போன்ற வடிவங்களில் காணப்படும்.

ஒவ்வாமை காரணமாக கண்ணில் ஏற்படும் அரிப்புகளுக்கு சிகிச்சையாக அன்டிஹிஸ்டமின் சொட்டுமருத்துகளே அதிகளவில் உபயோகிக்கப்படுன்றன.

அன்டிஹிஸ்டமின் உதாரணம்: மருந்தகங்களில் கிடைக்கப்பெறும் cetirizine எனும் மருந்து ஓர் அன்டிஹிஸ்டமின் வகையாகும் .

2. டிகன்ஜெஸ்டண்ட்ஸ் (Decongestants)

இவ்வகை மருந்துகள் பொதுவாக ஒவ்வாமையினால் மூக்கு மற்றும் சுவாசத் தொகுதியில் ஏற்படும் நெரிசல் / அடைப்புக்களால் ஏற்படும் சிரமங்களில் இருந்து விடுபட உபயோகப்படுகின்றன.

3. ஸ்டெரொய்ட்ஸ் எனும் ஊக்கி மருந்துகள் (Corticosteroids)

4. இமிவுனோதெரபி (Immunotherapy)

நீண்ட காலமாக ஒவ்வாமையின் அறிகுறிகளினால் தொடர்ந்து ஏற்படும் சிரமங்களில் இருந்து விடுபட Immunotherapy எனப்படும் சிகிசிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக இலேசாக ஒவ்வாமை ஏற்பட்ட ஒருவருக்கு சுயமாகவே அதில் இருந்து மீண்டுவர முடியுமெனினும், ஒவ்வாமையின் உக்கிரத்தை பொருத்து வைத்தியரை நாடி வைத்தியரிடமிருந்து முறையான ஆலோசனைகளை/சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வது முக்கியமானதாகும்.
Previous Post Next Post