சர்க்கரை நோயின் பொதுவான அறிகுறிகள்..!நீரிழிவு (சர்க்கரை) நோயின் காரணிகள் அதன் வகையினை பொருத்து மாறுபடுகின்றன. எந்த வகையான நீரிழிவு நோய் எனினும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதுவே காரணமாய் அமைந்து விடுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அது உடலில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோய் பொதுவாக Type 1, Type 2 என இருவகைப்படும் (இது பற்றிய விரிவான கட்டுரை விரைவில்). இதில் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் (gestational diabetes) எனப்படும் இன்னுமோர் நிலைமையும் உண்டு, எனினும் பொதுவாக குழந்தை பிறந்ததும் இந்நிலைமை இல்லாமல் போய்விடும்.

இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவைப் பொருத்து சர்க்கரை நோயின் அறிகுறிகளும் வேறுபடலாம். இரண்டாம் வகை (Type 2) சர்க்கரை நோயின் அறிகுறிகள் உடனடியாக தோன்றாவிடினும், முதலாம் வகை (Type 1) சர்க்கரை நோயின் அறிகுறிகள் உடனடியா மற்றும் மிகவும் உக்கிரமாகத் தோன்றலாம். எனினும் உலகில் வாழும் சர்க்கரை நோயாளிகள் அதிகளவானோருக்கு பொதுவாக காணப்படுவது இரண்டாம் வகை (Type 2) சர்க்கரை நோயாகும்.


சர்க்கரை நோயின் பொதுவான அறிகுறிகள்:

- குறையாத தாகம்.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் அதிகம் சிறுநீர் கழிப்பது.
- எந்நேரமும் பசியெடுத்தல்.
- திடீர் என உடல் எடை குறைதல்.
- சிறுநீரில்கீட்டோன்கள் (ketones) காணப்படுதல்.
- நாள்பட்ட சோர்வு.
- மங்கலான பார்வை.
- வாய் வறட்சி.
- வயிற்றுப் பிரச்சினைகள்.
- சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு.
- நரம்பு பிரச்சினைகள்.
- கவனச் சிதறல்.
- அடிக்கடி தொற்றுகள் ஏற்படுதல் (தோல் மற்றும் முரசு).

மேலும், சர்க்கரை நோயின் தன்மையை பொருத்து வித்தியாசமான அறிகுறிகளும் தோன்றலாம். எனினும், இவ்வறிகுறிகள் ஏற்படுமிடத்து இவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளே என திட்டவட்டமாக முடிவெடுக்க முடியாது. இவை வேறு நோய் நிலைமைகளின் தோற்றப்பாடாகவும் இருக்கலாம். ஆகவே இவ்வாறான அறிகுறிகள் உங்களில் அடிக்கடி அல்லது தொடர்ந்து ஏற்படுவதாக நீங்கள் கருதினால், அவற்றுக்கு வைத்தியரை நாடி முறையான ஆலோசனைகளைப் பெறுவது மிக முக்கியமானதாகும் (முக்கியமாக 40 வயதினை தாண்டியவர்கள்).

முதலாம் வகை (Type 1) சர்க்கரை நோய் பொதுவாக இளம்பராயத்தில், சிறுவர்களிலேயே அதிகம் ஏற்படுகிறது. இரண்டாம் வகை (Type 2) சர்க்கரை நோய் பொதுவாக எந்த வயதினருக்கும் ஏற்படலாம், அதிலும் பொதுவாக 40 வயதினை தாண்டியவர்களில் அதிகளவில் ஏற்படுகிறது. 
சர்க்கரை நோயின் பொதுவான அறிகுறிகள்..! சர்க்கரை நோயின் பொதுவான அறிகுறிகள்..! Reviewed by மருத்துவ உலகம் on January 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.