ஒரு வாரத்தில் எடை குறைக்க அன்னாசிப்பழம்.


வயிறு வீங்க தொப்பையை வளர்த்து, உடல் பெருகி, வியாதியையும் வரவைக்கிற எந்த உணவிற்கும் “நோ” சொல்லனும். எண்ணெய், ஜங்க் ஃபுட், காரசார மசாலா இதெல்லாம் மறந்துவிட்டு அன்னாசியை மட்டும் பார்க்க வேண்டும். சாப்பிட வேண்டும். அதற்கு பெயர்தான் அன்னாசி பழ டயட்.

அன்னாசி மிக குறைவான அளவே கலோரி உள்ளது.100 கிராம் அன்னாசியில் 40 சதவீதமே உள்ளது.அன்னாசியில் 90 சதவீதம் நீர்சத்து உள்ளது.மேலும் அதிலுள்ள பொட்டாசியம் அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது.

மேலும் அதில் அடங்கியுள்ள இரும்பு சத்து ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து அதிக அளவில் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கடத்திச் செல்கிறது. இதனால் உடல் சுறுசுறுப்படைந்து ,கொழுப்பை கரைக்க உதவுகிறது.அன்னாசியில் ப்ரோமெலைன் என்கின்ற நொதி ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.மேலும் நோய் எதிர்ப்பு திறனை வலுப்படுத்துகிறது. அன்னாசியில் விட்டமின் சி.அதிகம் உள்ளத்து. அது தசை நார்களை வலுப்படுத்தி,சக்தியை தருகிறது.ஆனால் அன்னாசியை வெட்டிய பின் உடனே உண்ண வேண்டும். அன்னாசி ஃப்ரஷாக உள்ளதா என பார்த்து வாங்குவது அவசியம்.

ஒரு நாளைக்கு தேவையான அன்னாசி டயட்.
காலை : அன்னாசி பழ சாறு+ஒரு பழம்(ஏதாவது)+ஒரு கப் தேநீர்
டீ ப்ரேக் : அன்னாசி பழ சாறு
மதியம் : நான்கு அன்னாசி பழதுண்டுகள்+ஒரு ப்ரெட்
மாலை : அன்னாசி பழ சாறு+ஒரு ஆப்பிள்
இரவு : இரு அன்னாசி துண்டுகள்+50கிராம் அளவு சாதம்+ ஒரு கப் தே நீர்

மூன்று நாட்களுக்கு உண்டான அன்னாசி டயட்:
முதலாம் நாள்: நீரும் அன்னாசி பழம் மட்டுமே உண்ண வேண்டும். இரண்டாம் நாள் : இரு கப் வேகவைத்த மீன்(ஒரு கப் மதியம், இன்னொரு கப் இரவில்), அன்னாசி மற்றும் நீர் மூன்றாம் நாள் : அன்னாசி பழம் ,நீர் அன்னாசி உடலிலுள்ள கழிவுகளையும் நச்சுக்களையும் அகற்றி உடலை சம நிலைப்படுத்துகிறது . இதை தவறாமல் கடைபிடித்து வந்தால் உடல் இளைப்பது உறுதி.
Previous Post Next Post