தேனில் மஞ்சள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.


தேனும் மஞ்சளும் எவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது நமக்குத் தெரியும். அதை இரண்டையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடலாமா?… சில பொருள்களை அவ்வாறு சேர்த்து சாப்பிட்டால் விஷமாக மாறிவிடும். அந்த வகையில் தேனும் மஞ்சளும் கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்னு தெரியுமா?… தெரிஞ்சிக்கோங்க…

ஒரே மருந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தால் நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும். அதுவும் எளிமையான முறையில் பணச்செலவு இல்லாமல் வீட்டிலேயே இயற்கை முறையில் இந்த தீர்வு கிடைக்கும் என்றால் வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டர்க. அப்படி ஒரு சிகிச்சை தான் இன்று நாம் பார்க்க இருப்பது. அதுவே தேன் மற்றும் மஞ்சள் சிகிச்சை.

தேனும் மஞ்சளும்
தேன் மற்றும் மஞ்சள் சிகிச்சைக்கு ஆண்டிபயாடிக், வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆனால் சில ஆரோக்கியம் தொடர்பான தொந்தரவுகள் உள்ளவர்கள் சற்று கவனமாக பயன்படுத்த வேண்டும். இந்த தீர்வை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

மஞ்சள்
மஞ்சள், ஜிங்கிபெரசியா என்ற தாவர குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பாரம்பரிய மசாலா பொருள் ஆகும். இஞ்சியும் இதே குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

ஆசியாவில் இது பரவலாக கிடைக்கும் ஒரு பொருள். குறிப்பாக, உலக ஏற்றுமதியில் பெரும்பங்கு இந்தியாவில் இருந்து கிடைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் வேர் பகுதியில் பல முக்கிய கூறுகள் இருப்பதால் உணவை ருசிக்க செய்யவும், மருத்துவ குணங்களையும் ஒருசேரப் பெற்ற ஒரு பொருளாக இந்த மஞ்சள் உள்ளது. மஞ்சளின் ஆரஞ்சு நிறம் காரணமாக, சில நிறுவனங்கள் ஆடை சாயங்களை தயாரிப்பதற்கான ஒரு தளமாக இதனைப் பயன்படுத்துகின்றன. மேலும் , மனித ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் போது, இது இயற்கையான அழற்சி, வலி நிவாரணி மற்றும் தடுப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளில் உள்ள உயர் குர்குமின் அளவுடன் இணைந்த மற்ற அன்டி ஆக்சிடென்ட்களும் பல்வேறு வகையான நோய்களை தடுக்கும் பண்புகளை இதற்கு வழங்குகின்றன. இதன் காரணமாக பல நூற்றாண்டுகளாக பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் இந்த மஞ்சள் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்து பல நிவாரணங்களை அளித்து வருகிறது. இந்த மஞ்சளுடன் இணைந்து மற்றொரு மூலப் பொருளான தேன் பல நன்மைகளைச் செய்து வருகிறது.

தேன்
தேன் மற்றும் மஞ்சள் ஒருங்கிணைந்து, ஒரு சக்தி வாய்த்த அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமிநாசினி பண்புகளைக் கொண்டு, உடல் பாதுகாப்பை வலுப்படுத்திட உதவுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த இயற்கை ஆண்டிபயாடிக் என்று கருதப்படுகிறது. நோய்களை உண்டாக்கும் பல வகையான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க இந்த கலவை பெரிதும் உதவுகிறது. மற்ற செயற்கை தீர்வுகளைப் போல், இவை குடல் இயக்கங்களில் எந்த ஒரு தீங்கையும் உண்டாக்குவதில்லை. மாறாக நல்ல பக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் இதனை உணவுகளில் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

தேன் மஞ்சள் கலவை
கலவையில் குறிப்பிட்ட அளவு பாலிபீனால், வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன. இந்தக் கலவையில் 150 க்கும் அதிகமான சிகிச்சைகள் உள்ளன, இதில் அழற்சி குறைபாடுகள் மற்றும் புற்றுநோய்களின் பல்வேறு வகைகள் ஆகியவை அடங்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்க உதவுகின்றன. மேலும் முன்கூட்டியே வயது முதிர்வை ஏற்படுத்தும் கூறுகளை அழிக்க உதவுகின்றன.

Previous Post Next Post