கறிவேப்பிலையும் அதன் மருத்துவப் பயன்களும் | Health Tipsகறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டாலோ அல்லது அதனை இடித்து அதன் சாற்றை பருகுவதாலோ உடல் எடை குறைக்க அது பெரிதும் உதவி புரிகிறது. இவ்வாறு உடல் எடையினைக் குறைக்க ஆயுர்வேத மருத்துவத்தில் கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது.

உணவு சமிபாடடைதலில் உள்ள சிக்கல்களில் இருந்து மீள கறிவேப்பிலை மிகவும் சிறந்ததாகும். உணவு சமிபாடடைதலில் உள்ள சிக்கலினாலேயே, உணவில் உள்ள அதிகளவான கொழுப்புக்கள் வயிற்றில் படிந்து, உடல் பருமன் அதிகரிக்க அவை காரணமாய் அமைகின்றன.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு கறிவேப்பிலையை உட்கொள்வதால், உடலின் தொழிற்பாடுகள் (metabolism) அதிகரித்து, உடல் பருமன் குறைய அது காரணமாகிறது. பச்சை கறிவேப்பிலையில் உடலுக்கு பாதகமான கொழுப்புக்களை எரிக்கும் தன்மை அதிகளவில் காணப்படுகிறது.கொலஸ்ட்ரோல் (cholesterol) பிரச்சினையினால் அவதிப்படுபவர்களுக்கு இது ஓர் சிறந்த நிவாரணியாகும். பொதுவாக கறிவேப்பிலை உடலை சுத்தம் செய்து, உடலில் உள்ள நச்சுப் பதார்த்தங்களை அகற்றுவதில் உதவிபுரிகிறது.

கறிவேப்பிலை எமது உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும், நம்மில் பெரும்பாலானோர் அதை நாம் சாப்பிடும் சாப்பாட்டிலிருந்து தூக்கி எறிந்து விடுகிறோம். எனினும் நமது முன்னோர்கள் கறிவேப்பிலையின் நன்மைகள் கருதியே இதனை உணவில் சேர்த்துவந்துள்ளனர். கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர அது உதவுகிறது..

எனவே, முடியுமானவரை ஒவ்வொரு நாளும் அல்லது வாரத்தில் 3 தொடக்கம் 5 நாட்களாவது, காலையில் வெறும் வயிற்றில் 10-15 கறிவேப்பிலைகளை வாயில் போட்டு மென்று விழுங்குவதால் அல்லது அதனை ஜூஸ் வடிவில் தேனுடன் சேர்த்து பருகுதல் உடலுக்கு பல ஆரோக்கியமிக்க நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
கறிவேப்பிலையும் அதன் மருத்துவப் பயன்களும் | Health Tips கறிவேப்பிலையும் அதன் மருத்துவப் பயன்களும் | Health Tips Reviewed by மருத்துவ உலகம் on December 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.