சிறுநீரகக் கற்களை கரைத்து இல்லாதொழிக்கும் வாழைத்தண்டு | Kidney Stones


வெட்டி வீசப்படும் வாழைத்தண்டினால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய்களை குணப்படுத்த முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், வாழைத்தண்டு அப்படிப்பட்ட பல மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

வாழைத்தண்டு ஓர் நார்ச்சத்துள்ள உணவுப் பொருள் என்பதால் இதனை உட்கொள்வதன் மூலம் எமது உடல் பல வழிகளில் நன்மையடைகிறது.

சிறுநீரகம் மற்றும் சிறுநீரகக் கற்கள் சார்ந்த பிரச்சனைகள்

சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் முறையாக உடலை விட்டு வெளியேறாமல் போவதால், பின்பு அது பல உடல்நலப் பிரச்சினைகள் உருவாக வழிவகுக்கிறது. இரசாயனங்கள் நிறைந்த துரித உணவுகள் மற்றும் பாணங்களை இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் எடுத்துக்கொள்வதாலும், குறைவாக நீர் அருந்துவதாலும், சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகளும் மிகவும் விரைவாக அவர்களை நெருங்கிக்கொள்கிறன. இதனால் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு விரைவில் ஆளாகின்றனர்.



சிறுநீரகக் கற்கள் உருவாக, குறைந்தளவு நீர் அருந்துதல், அதிகம் மசாலா, காரம் கூடிய உணவுகள் மற்றும் வறட்சியான உணவுகளை உற்கொள்தல் போன்றவை காரணமாக அமைகின்றன. அத்துடன், சரியான நேரத்தில் சிறுநீரை முறையாக வெளியேற்றாமல், அடிக்கடி சிறுநீரை அடக்கிவைப்பதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.

வாழைத்தண்டானது உடலில் காணப்படும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதில் உதவிபுரிகிறது. சிறுநீரகக் கற்களினால் அவதிப்படுபவர்கள், தினசரி வாழைத்தண்டின் சாற்றினை பருகுவதனால் சிறுநீரகக் கற்கள் கரைந்து அவை காணமல் போகின்றன.

வாழைத்தண்டினை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், முதல் கட்டத்தில் உருவாகும் சிறிய சிறுநீரகக் கற்களைஇலகுவில் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டினை குறைத்தபட்சம் வாரம் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்து.

இவை தவிர்ந்த, மாதவிடாய்க் கோளாறுகள், நீரிழிவு நோய் மற்றும் வயிற்றுப் புண் போன்றவற்றினால் அவதியுறுபவர்களுக்கும் வாழைத்தண்டு ஓர் மிகவும் சிறந்த நிவாரணியாகும். வாழைத்தண்டு உடலுக்கு குளிர்ச்சியளிப்பதனால்ல், கோடைகாலங்களில் இது உடல் சூட்டினை தணிக்க பெரிதும் உதவுகிறது.
Previous Post Next Post