உயர் இரத்த அழுத்தத்தை எப்படி இயற்கையாக கட்டுப்படுத்தலாம்?


 நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள பாதகமான கொழுப்புக்கள், இதயதிற்கு இரத்தத்தினை வழங்கும் இரத்தக் குழாய்களில் படிந்து, இரத்த ஓட்டத்தில் தடங்களை ஏற்படுத்தி,  இதயத் தசைகளுக்கு சரியாக இரத்தம் போகவிடாமல் தடுத்து, இதயம் சார் பிரச்சினைகளை உருவாக்குகிறது.

இவ்வாறு இதயம் சார் பிரச்சினைகள் வராமல் தடுக்க வேண்டுமெனின், உடலின் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு என்பன சரியான முறையில் பேணப்படுதல் வேண்டும்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும், இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பினால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிவாரணமளிக்கும் சில நாட்டு வைத்திய முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி, அதில் 3/4 கப் அதிமதுர வேரைத் தட்டிப் போட்டு 2 மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின் அதை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, 6 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் அந்நீரை குளிக்கும் நீருடன் சேர்த்து கலந்து குளிக்க வேண்டும்.

இரத்த அழுத்தம் குறைவாக உள்ளதா? எளிய வழியில் குறைவான இரத்த அழுத்தத்தை சரிசெய்ய வேண்டுமா? அப்படியானால் தினமும் சிறிது உலர்ந்த திராட்சையை இரண்டு வேளை சாப்பிடுங்கள். இதனால் இரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்கலாம்.

தினமும் காலையில் துளசி இலையை அரைத்து சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடியுங்கள். இந்த சாற்றினை குறைவான இரத்த அழுத்தம் கொண்டவர்கள் தினமும் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் சீராகிவிடும்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளை சாதத்தை தவிர்த்து, கைக்குத்தல் அரிசி சாதத்தை சாப்பிடுவது நல்லது. இந்த அரிசியில் சோடியம் மற்றும்கொழுப்பின் அளவு மிகவும் குறைவு. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் உப்பு இல்லாத உணவுப் பழக்கவழக்கத்தினை கடைபிடிக்க இந்த கைக்குத்தல் அரிசி சாதத்தை சேர்த்துக் கொள்ளவே பரிந்துரைக்கப்படுகின்றனர்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கொத்தமல்லி ஜூஸை தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும். இப்படி குறைந்தது 10-12 நாட்கள் ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம்குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து இருப்பதைக் காணலாம்.

ஒரு சிறிய பாத்திரத்தில் 1 தேக்கரண்டி இஞ்சி சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி சீரகப் பொடி சேர்த்து ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வர, உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

முக்கியமாக உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், அன்றாட உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். குறைந்தது 2 லிட்டர் நீரைத் தவறாமல் குடிக்க வேண்டியது அவசியம்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் சாத்துக்குடி, ஆரஞ்சு, பீச், ப்ளம்ஸ் போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. முக்கியமாக தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

அக்காலத்தில் எல்லாம் காலையில் எழுந்ததும் அருகம்புல் ஜூஸ் குடிக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டிருந்தார்கள். இத்தகைய அருகம்புல் ஜூஸை ஒருவர் தினமும் காலையில் 1/2 கப் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

ஒரு கையளவு கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு, 1 டம்ளர் நீர் ஊற்றி அரைத்து வடிகட்டி, அத்துடன் 1 எலுமிச்சையைப் பிழிந்து தினமும் 3 முறை என 1-2 மாதங்கள் குடித்து வர வேண்டும். அதன்பின் ஒருவேளை, அதுவும் காலையில் வெறும் வயிற்றில் மட்டும் குடித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனை சரியாகும்.

உயர் கொலஸ்ட்ரால்

தற்போது பலர் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். இதனால் உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, கெட்ட கொழுப்புக்களின் அளவு அதிகரித்து, அதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை வந்துவிட்டால், இதய பிரச்சனை விரைவில் வந்துவிடும். இத்தகைய உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு சில நாட்டு வைத்தியங்கள் தீர்வளிக்கும்.

சூரியகாந்தி விதைகளில் உள்ள லினோலிக் அமிலம், தமனிகளின் சுவர்களின் தேங்கிய கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். எனவே சமையலில் சூரியகாந்தி விதை எண்ணெயை பயன்படுத்துங்கள். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

உயர் கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, 1 கப் மோரில் கலந்து, அதில் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் தவறாமல் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஒரு கப் நீரில் 2 டீஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடியுங்கள். இப்படி உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், காபி, டீக்கு பதிலாக, மல்லி டீயைக் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தடுக்கலாம்.
Previous Post Next Post