கறிவேப்பிலையை தூக்கி எறியாதீர்கள்..! இதை கொஞ்சம் வாசியுங்கள் | Health Tips


மருத்துவக் குணம் நிறைந்த கறிவேப்பிலையை பலரும் உணவில் இருந்து தூக்கி எறிகின்றனர். சிலர் கறிவேப்பிலை மணத்துக்காக மட்டுமே சமையலின் போது உணவில் சேர்க்கப்படுகிறது எனவும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் அது மருத்துவக் குணங்கள் நிறைந்தது என அறிந்திருந்தும் அதன் வித்தியாசமான சுவைக்காக அதனை உணவில் இருந்து ஒதுக்கிவிடுகின்றனர்.

உண்மை கறிவேப்பிலை என்பது இப்படி தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று கிடையாது, அது நீங்கள் சுவைத்து சாப்பிட வேண்டிய ஓர் அருமருந்தாகும். கறிவேப்பிலை பொதுவாக எல்லாவிதமான சமையல்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

100 கிராம் கறிவேப்பிலையில் என்ன உள்ளது என்று பார்ப்போம்:

- வைட்டமின் C 4 mg.
- இரும்பு சத்து  3.1 mg.
- கால்சியம் 810 mg.
- பாஸ்பரஸ் 600 mg.
- வைட்டமின் A.



இவற்றுடன்,

- நீர்ச்சத்து 0.66 %
- புரதம் 6.1%
- கொழுப்பு 0.1%
- மாவுப்பொருள் 0.16%
- நார்ப்பொருள் 6.4%
- உடலுக்கு தேவையான தாது உப்புக்கள் 4.2%

கறிவேப்பிலை நோய் எதிர்புச் சக்தியை தரும் இயல்பு கொண்டது. மேலும் உணவு சமிபடைத்தலிலும் உதவி புரிகிறது.

கறிவேப்பிலை பித்தம், வாந்தி, செரிமானக் கோளாறு மற்றும் சமிபாட்டுத் தொகுதியுடன் தொடர்புடைய சில பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணியாகும்.

காலையில் உணவருந்த முன் 1-4 கறிவேப்பிலைகளை பச்சையாக வாயில் போட்டு மென்று விழுங்குவதுடன் தினமும் போதுமான உடற்பயிற்சி செய்துவந்தால் உடல் எடையும் சீராகப் பேணப்படும்.

எனவே இத்தனை மருத்துவ குணங்களை கொண்ட கறிவேப்பிலையை ஒருபோதும் உணவில் இருந்து தூக்கியெறியாதீர்கள். முடிந்தவரை உணவுடன் சேர்த்து மென்று விழுங்க முயற்சியுங்கள்.
Previous Post Next Post