இருமலுக்கு இயற்கை நிவாரணம் | Home Remedies


இருமல் என்பது சுவாசத்தொகுதியுடன் தொடர்புடைய ஓர் பிரச்சினையாகும். இது தொற்றுகள் மற்றும் கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும் ஓர் பொறிமுறையாகும். எனினும் தொடர் இருமல் மிகவும் ஓர் அசெளகரியமான நிலைமையை உருவாக்கும்.

இருமலை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்துவது என கீழே பார்க்கலாம்.

1. இஞ்சி

இஞ்சி இருமலுக்கு சிறந்த நிவாரணத்தை தரும். மேலும், அழற்சியை கட்டுப்படுத்தும் தன்மை இஞ்சியில் உள்ளது.

ஆய்வுகளின் படி இஞ்சியின் அழற்சிக்கு எதிராக செயல்படும் தன்மையானது சுவாசக்குழாய்களில் ஏற்படும் அழற்சியின் அளவை கட்டுப்படுத்துகிறது. இது இருமலை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது.

தேநீர் மற்றும் டீயில் அரைத்த இஞ்சியை போட்டுக் குடிக்கலாம். அல்லது சிறிதளவு வெந்நீரில் இஞ்சி, தேன், மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து பருகலாம். இருமலினால் அவதியுறுவபர்களுக்கு இது சிறந்த பலனைத் தரும்.

சிலருக்கு இஞ்சி வயிற்றுப் பிரச்சினை மற்றும் நெஞ்சு எரிவு போன்ற நிலைமைகளை தோற்றுவிக்கும். இவ்வாறானவர்கள் இஞ்சியை கவனமாக கையாள வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்.

2. நீர் மற்றும் பானங்கள்.

இருமல் மற்றும் சளியின் போது நீர் மற்றும் பானங்களை (குளிரற்ற) அதிகம் உள்ளெடுத்தல் அவசியமாகிறது. உடலில் இருந்து வெளியேற்றப்படும் நீர் இதனால் சமநிலையடைகிறது.


ஆய்வுகளின் படி இருமல், தும்மல் போன்றவற்றை இளம் சூடான பானங்களை (warm water) அருந்துவதின் மூலம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.

அருந்தக்கூடிய பானங்கள்:

- சூப் வகைகள்.
- மூலிகை பானங்கள்.
- இளம் சூடான நீர்.
- இளம் சூடான பழச்சாறு வகைகள்.

3. நீராவி.

பலவிதமான சுவாசத் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு நீராவி பிடித்தல் ஒரு சிறந்த நிவாரணியாகும். நாட்பட்ட சளி, இருமல் மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு நீராவி நல்ல பலனை தருகிறது.

நீராவி பிடிக்கும் பொது நீராவியை நன்றாக உள்ளிழுத்து வெளியில் விட வேண்டும். விரும்பினால் நீராவி பிடிக்க முன் புதினா போன்ற எதாவது ஒரு வகை மூலிகையை தண்ணீரில் இட்டு தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ளலாம். இதனால் இரட்டிப்பான பலன் கிடைக்கும்.

4. உப்பு நீரினால் வாய் கொப்பளித்ததல்.

வறண்ட இருமல் மற்றும் தொண்டை நோவுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

உப்பு நீர் தொண்டையில் காணப்படும் சளியின் அளவை குறைக்கிறது. இதனால் சளியை வெளியேற்ற இரும வேண்டிய தேவை ஏற்படுவதில்லை.

தொண்டையில் நன்கு படும்படி உப்பு நீரை தொண்டைக்கு எடுத்து சிறிதுநேரம் வைத்து கொப்பளிக்கவேண்டும். இருமல் குறையும் வரை போதுமான அளவுக்கு இதனை செய்துவரலாம்.

குறிப்பு: நீங்கள் ஏதாவது நோய் நிலைமைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் உங்கள் வைத்தியரின் பரிந்துரைகளை மீறி மேலே உள்ளவற்றை நீங்கள் முயற்சிக்கக் கூடாது. சில உணவுகள் மற்றும் காய்கறி, பழங்களில் உள்ள சேர்வைகள் மருந்து வகைகளுடன் தாக்கமடைந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை கவனத்திற்கொள்ளுங்கள்.
Previous Post Next Post