கைவிரல் வீக்கமும் நோய் அறிகுறிகளும் | Signs & Symptoms


உடல் திரவங்கள் திசுக்களில் அல்லது மூட்டுகளில் சேகரிக்கப்படும் போது அவ்விடத்தில் வீக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் உங்கள் விரல்கள் வீங்கியிருப்பதை நீங்கள் அவதானிக்கக் கூடும். இது பொதுவாக ஒரு பெரிய பிரச்சினை இல்லாவிடினும், சில வேளைகளில் வீங்கிய உங்கள் விரல்களும் கைகளும் நீங்கள் கட்டாயம் கவனம் செலுத்தவேண்டிய ஒரு உடல்நலப் பிரச்சினையாகவும் இருக்கலாம்.

பொதுவாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது உங்கள்  இதயம், நுரையீரல் மற்றும் தசைகளுக்கு அதிக இரதம் செலுத்தப்படுகிறது. அதற்கு காரணம் உடற்பயிற்சியின் போது இவற்றிற்கு அதிகளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆகவே, இதன்போது உங்கள் கைகளுக்கான இரத்தம் சற்றுக் குறைவாகவே பாயும். இதன் போது உங்கள் கைகளில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் உங்கள் கைவிரல்கள் வீக்கமடைகின்றன.

அதிக வெப்பமான காலங்களில் உங்கள் உடல் அளவுக்கு மீறி வெப்பமடையும் போதும் மேலே குறிப்பிடப்பட்டது போன்ற ஒரு நிகழ்வு ஏற்படுகிறது. வெப்பம் உடல் மேற்பரப்பை விட்டு வெளியேற உங்கள் தோலில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கமடையும். இது ஓர் பொதுவான நிலைமையாகும்.

கைவிரல்கள் அசாதாரணமாக வீங்குவதற்கான காரணம் பின்வரும் நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

1. உடல் காயங்கள்.
2. தொற்று நோய்கள்.
3. மூட்டு அழற்சி (Arthritis)
4. கீல்வாதம் (Gout).
5. சிலவகை மருந்துகளின் பக்கவிளைவு.
6. மணிக்கட்டு குகை நோய் (Carpal Tunnel Syndrome).
7. சிறுநீரக நோய்கள்.
8. நிணநீர் தேக்க வீக்கம் (Lymphedema).

இவை தவிர கர்பகாலங்களில் பெண்களுக்கு கால் மற்றும் கை வீக்கங்கள் ஏற்படலாம். எவ்வாறாயினும் மேலுள்ள எதாவது காரணங்களுக்காக உங்கள் உடலில் வீக்கங்கள் ஏற்படுமிடத்து அது பற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் மற்றும் வைத்தியரின் உதவியையும் நாட வேண்டும்.
أحدث أقدم