தலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்! | Health Tips


தலைமுடி என்பது ஒருவரின் தோற்றத்தையும் அழகையும் வெளிக்காட்டும் ஒரு முக்கியமான அங்கமாகும். தலைமுடி உதிர்ந்து போதல் இன்று பலராலும் எதிர்நோக்கப்படும் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது.,

தலைமுடி உதிர்வதை தடுக்கு பின்வரும் வீட்டுவைத்திய முறைகளை முயற்சித்துப் பார்க்கலாம்.

கறிவேப்பிலை
தலையில் தடவும் எண்ணைக்கு எமது முன்னோர்கள் கறிவேப்பிலையையும் சேர்த்துக்கொள்வது ஒரு வழக்கம். காரணம் இது தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும். கறிவேப்பிலை தலைமுடி சார்ந்த  பிரச்சினைகளை குணப்படுத்த வல்லது. தலைமுடி வளர தேவையான மூலப்பொருட்கள் அடங்கியுள்ளதால் தலைமுடி வளர்ச்சியில் இவை பெரிதும் உதவி புரிகின்றன, மற்றும் பாதிப்புக்குள்ளான தலைமுடியையும் இது சரிசெய்துவிடுகிறதாம்.

வெங்காயம்
முடி உதிர்ந்துபோகும் பிரச்சினைக்கு வீட்டு வைத்திய முறையில் வெங்காயம் முதலில் பரிந்துரைக்கப்படுகிறது. வெங்காயத்தின் சாற்றில் அதிகளவில் சல்பfர் காணப்படுகிறது. இது முடி வளர்வதை ஊக்குவிக்கும். அத்துடன் அடர்த்தியான முடி வளர ஏதுவாக அமையும்.

பூண்டு
ஜீரண சக்தியை எவ்வாறு இது அதிகரிக்கிறதோ அதே போன்று முடியின் நலனையும் பாதுகாக்கிறது. உணவில் அதிகமாக பூண்டை சேர்த்து கொண்டால் பல நன்மைகளை இது ஏற்படுத்தும். மேலும் இதில் அதிகம் சல்பர் இருப்பதால் முடி உதிர்ந்த இடத்தில் முடியை மீண்டும் வளர செய்யும்.

பீட்ரூட்
பீட்ரூட் எமது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் செயப்பாடுகளை  சீரமைக்கும் தன்மை கொண்டது. Lycopene எனப்படும் மூலப்பொருள் பீட்ரூட்டில் உள்ளதால் இது தலைமுடி வளர்ச்சியில் பெரிதும் உதவிபுரிகிறது.

தக்காளி
தக்காளியில் அதிகளவான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால், இது உடலில் உள்ள, உடலுக்கு பங்கம் விளைவிக்கும் பதார்த்தங்களை அகற்ற வல்லது .
இதனால் முழு உடலையும் இது நலம் பெற செய்கிறது. இதனால் தக்காளி தலைமுடியையும் ஆரோக்கியமாக பேணுவதில் உதவிபுரிகிறது.

கேரட்
கேரட்டில் உள்ள ஊட்டசத்துக்கள் பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். அதிகளவில் வைட்டமின் B7 இவற்றில் காணப்படுவதால் தலையின் இரத்த ஓட்டம் சீராக்கப்படுகிறது. இதனால், தலைமுடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் வளர ஆரம்பிக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிகளவான ஊட்டசத்துக்கள் உள்ளனவாம். இதில் குறிப்பாக  காணப்படும் beta-carotene முடிக்கு பலவகையில் உதவிபுரிகிறது. நமது உடல் இந்த beta-carotene இனை வைட்டமின் A  ஆக மாற்றி தலைமுடியின் வளர்ச்சியில் உதவிபுரிவதோடு, தலைமுடி உதிர்வதையும் தடுத்துவிடுகிறது.

பீன்ஸ்
அதிகளவில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் E கொண்டிருக்கும் இந்த பீன்ஸ்களில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு. தலைமுடியின் ஆரோக்கியத்தை இவை அதிகரித்து வலுவான முடியை வளர உதவுகிறது. தலைநரைகள் ஏற்படாமல் தடுக்கும் இயல்பு பீன்ஸ்களுக்கு உள்ளதாம் .
أحدث أقدم