வேர்க்கடலையின் (நிலக்கடலை) ஆரோக்கிய நன்மைகள்!


தென் அமெரிக்காவை தாயகமாக கொண்ட வேர்க்கடலை இந்தியா, இலங்கை உற்பட தெற்காசிய நாடுகளில் வாழும் மக்கள் தினசரி தமது உணவில் பயன்படுத்தி வரும் ஒரு முக்கிய தானியமாகும். சிலர் இதனை உணவுப்பொருட்களின் சுவையை அதிகரிக்க பயன்படுத்துகின்றனர். எனினும் பலரும், வேர்க்கடலையை ஒரு சிற்றுண்டியாகவே பயன்படுத்துகின்றனர். மகாத்மா காந்தி கூட வேர்க்கடலையை விரும்பி சாப்பிடுவாராம்.

தெற்காசிய நாடுகளில் வேர்க்கடலை ஒரு சிற்றுண்டியாக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருக்கிறது. எந்தவொரு சிற்றுண்டி வியாபாரியிடமும் வேர்க்கடலை எளிதில் கிடைத்துவிடும்.

சரி, வேர்க்கடலையில் அப்படி என்ன ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன என பார்க்கலாம்.

பாதாம் மற்றும் முந்திரியை விட வேர்க்கடலையில் இரண்டு மடங்கு சத்துக்கள் உள்ளனவாம். வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு, புரதம், வைட்டமின் A,  வைட்டமின் B3, போலிக் ஆசிட் (folic acid) மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

வேர்க்கடலையின் ஆரோக்கிய நன்மைகள்:
  • இளமையை பேணி சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
  • இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.
  • இதய வால்வுகளை பாதுகாக்கும்.
  • பித்தப்பை கற்களை கரைக்கும்.
  • நீழிவு நோயை கட்டுப்படுத்தும்.
  • மன அழுத்தம் குணமாகும்.
  • ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
  • வேர்க்கடலையில் உள்ள நல்ல கொழுப்பு உடல் எடையினை குறைக்க உதவுகிறது.
  • வேர்க்கடலையில் போலிக் ஆசிட் (folic acid) இருப்பதால் இது கர்ப்பிணித் தாய்மாருக்கு மிகவும் நல்லது. மேலும், வேர்க்கடலை சாப்பிட்டுவர பெண்களின் கர்ப்பப்பை மேலும் வலுவடையும்.

Previous Post Next Post