வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற இதை சாப்பிடுங்கள்; இலகுவான வீட்டு வைத்தியம்.


வயிறுப்புழுக்களின் தொல்லை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படக்கூடியது.  குடல் புழுக்கள் ஏற்படுவதற்கான பிரதான காரணமாக சுகாதாரமற்ற உணவுப் பழக்க வழக்க முறைகளை குறிப்பிடலாம்.

சுத்தமற்ற நீர், சுகாதாரமற்ற உணவுகள், காய்கறி மற்றும் மாமிச உணவுகளை சரியாக கழுவாமல் அல்லது முறையாக சமைக்காமல் உண்ணுதல் என்பன குடல் புழுக்கள் உருவாகும் ஆபத்தை அதிகரிக்கும்.

ஒருவருக்கு குடல் புழுக்கள் ஏற்பட்டுள்ளதற்கு அறிகுறியாக:
  • சுவாசிக்கும் போது துர்நாற்றம் வீசுதல்.
  • வயிற்றுப்போக்கு.
  • வயிற்று வலி.
  • தூக்கமின்மை.
  • அடிக்கடி பசி எடுத்தல்.
  • தலைவலி.
  • உடல் சோர்வு.
என்பவற்றை குறிப்பிடலாம்.

உங்களுக்கும் குடல் புழு தொல்லை இருப்பின், குடல் புழுக்களை பின்வரும் இலகுவான வீட்டு வைத்திய முறையில் வெளியேற்றிவிடலாம்.

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சற்று விளக்கெண்ணெய் விடவேண்டும். விளக்கெண்ணெய் சூடாகியதும் அதில் 4 தோல் உரித்த பூண்டு பற்களை இட வேண்டும். பூண்டுப் பற்களை விளக்கெண்ணெயில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்து இதில் ஒரு 1/4 கரண்டி அளவு மஞ்சள் பொடியினை சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்போது இந்த கலவையை இன்னும் சற்று நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இரவு உணவு சாப்பிட்டதன் பின்னர் 1 மணி நேரம் கழித்து நீங்கள் தயாரித்துக்கொண்ட இந்த பூண்டுப் பற்களை உண்ண வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் அடுத்த நாள் காலையில் மலத்துடன் புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும். இதை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் இந்த முறையை பயன்படுத்த வேண்டும்.

வயிற்றில் புழுக்கள் இல்லாவிட்டாலும், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்து உண்டு வந்தால், வயிற்றில் புழுக்களின் தொல்லை வராது. இதை நீங்களும் வீட்டில் செய்து பார்க்கலாம்.
Previous Post Next Post