தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!


அனைவரும் விரும்பி உண்ணும் பழமும் அதிகளவில் உண்ணப்படும் பழமும் என்றால் அது வாழைப்பழம் தான். வாழைப்பழங்களில் பல வகைகள் உண்டு. வாழைப்பழங்களில் ஒரு வகையான செவ்வாழையில் (Red Banana) உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

வாழைப்பழங்களில் அதிக சத்துக்கள் நிறைந்த ஒரு வகை தான் இந்த செவ்வாழைப்பழம். இதில் எமது உடலுக்குத் தேவையான பல  ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகளவில் காணப்படுவதால் இது சிறுநீரக கற்கள் உருவாதலை தடுக்கும். சிறுநீரக கற்களால் ஏற்படும் சிறுநீரகப் பிரச்சினைகளை இல்லாதொழிக்க தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு வருதல் நல்லது. மேலும், செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் எமக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் புற்றுநோய் வராமல் எமது உடலை பாதுகாக்கிறது.

செவ்வாழையில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின்கள் இரத்தத்தில் உள்ள கலங்களை சீராக பராமரிக்க உதவுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக பேணப்படுகிறது.

செவ்வாழை கல்சியம் உறிஞ்சலை அதிகரிக்கும். கல்சியம் உறிஞ்சல் எமது உடலில் உள்ள எலும்புகளை வலுவடையவைக்கும். ஆகவே எலும்புகள் உறுதியாக செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டு வருதல் நல்லது.

செவ்வாழையில் மற்றைய வாழைப்பழங்களை விட குறைந்தளவு கலோரிகள் காணப்படுவதால், உடல் எடை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக செவ்வாழை பழத்தை உண்ணலாம்.

செவ்வாழையில் காணப்படும் இயற்கையான சர்க்கரை உடலை சோர்வின்றி சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இயங்க உதவி புரிகிறது. இதனால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

நெஞ்சு எரிச்சல் பிரச்சினையை தீர்க்கும் மருத்துவக் குணம் செவ்வாழையில் உள்ளதாக கூறப்படுகிறது. நெஞ்சு எரிச்சல் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து செவ்வாழையை உண்டுவருவதால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடுமாம்.

மேலும், உடல் உடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு செவ்வாழை பழங்களை சாப்பிட்டால், நீண்ட நேரத்திற்கு மீண்டும் பசி ஏற்படாது.
Previous Post Next Post