பற்களில் படிந்திருக்கும் கறைகளை செலவே இல்லாமல் இந்த எளிய முறையை பாவித்து அகற்றிக்கொள்ளலாம்!


ஒருவரின் முகத்தின் அழகு அவரது புன்னகையிலும் தாக்கம் செலுத்துகின்றது. ஓர் அழகிய புன்னகை இருந்தால் போதும் முகத்தின் அழகு பல மடங்காக அதிகரிக்கும். 

அழகிய புன்னகையை பெற வேண்டுமென்றால் பற்களை அழகாகப் பேணுவதும், பராமரிப்பது மிகவும் முக்கியமானது. சில வேளைகளில் உங்கள் பற்களில் கறைகள் ஏதாவது படித்திருந்தால், புன்னகையின் மொத்த அழகும் பாதிக்கப்படுவதுடன், அவ்வாறானவர்களால் புன்னகைப்பதும் சிரமமாகவே இருக்கும்.

பற்களில் கறைகள் படிவதற்க்கு பல காரணங்கள் இருக்கின்றன. சரிவர அல்லது முறையாக பல் துலக்காமல் இருப்பது, நீங்கள் வழக்கமாக அருந்தும் பானங்கள், சாப்பிடும் உணவு வகைகள், வழக்கமாக அருந்தும் நீரில் உள்ள சேர்வைகள் என நீங்களே அறியாத பல காரணங்கள் இருக்கலாம். இவ்வாறு பற்களில் படிந்த இந்தக் கறைகள் பற்பசை மூலம் அகற்றுவதும் கடினமாக இருக்கும்.

பற்களில் படிந்துள்ள கறைகளை செலவே இல்லாமல் சில பொருட்களை உபயோகித்து வீட்டிலேயே எப்படி அகற்றிக்கொள்ளலாம் என்பது பற்றி இந்தக் காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.  

Previous Post Next Post