விரைவாக 10 கிலோ எடை குறைக்க ஓர் அற்புத பானம் | Health Tipsஉடலில் தேங்கி நிற்கும் கொழுப்புக்களால் பலவேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. கொழுப்புக்கள் உடலில் தேங்கி நிற்பதால், உடலின் பருமன், தொப்பை மற்றும் இன்னும் பல ஆரோக்கிய ரீதியான புதிய பிரச்சினைகள் உருவெடுக்கின்றன.

இப்பிரச்சினைகளை தவிர்க்க வேண்டுமெனின், முதலில் உணவுப்பழக்க வழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றியமைக்க வேண்டும். துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அத்துடன், உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பினை அகற்ற உடற் தொழிற்பாட்டினை அதிகரிக்க வேண்டும்.

உடற் தொழிற்பாட்டினை அதிகரிக்க, உடற் பயிற்சியுடன் சில உணவு வகைகள் மற்றும் பானங்களை போதுமான அளவில்  உள்ளெடுக்கவேண்டும். கீழே உடல் எடையினை விரைவாக குறைக்க உதவும் ஓர் இயற்கையான பானத்தைப் பற்றிப் பார்ப்போம்.

இப்பானத்தை செய்வதற்கு தேவையான பொருட்கள்:

- ஆப்பிள் சீடர் வினிகர் – 1 மேசை கரண்டி.
- எலுமிச்சை சாறு – 1 மேசை கரண்டி.
- உறைய வைத்த பெரிப் பழங்கள் – 2 மேசை கரண்டி.
- தண்ணீருடன் கொஞ்சம் ஐஸ் கட்டிகள்.

செய்முறை:

ஓரளவு அகலமான பாத்திரத்தில் பெரிப் பழங்களை போட்டு, சற்று தேனை அதன் மேல் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்பு ஒரு மேசைக்கரண்டியை உபயோகித்து பெரிப் பழங்களை கடைந்து கொள்ளுங்கள். அதில் ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, பின் போதுமான அளவு நீர் சேர்த்து, கொஞ்சம் ஐஸ் கட்டிகளைப் அதில் இட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது பானம் தயார் நிலையில் உள்ளது.

இப்பானத்தினை தினமும் குடித்துவர, உடலில் காணப்படும் நச்சுப் பதார்த்தங்கள் அகற்றப்பட்டு, அத்துடன் உடலில் தேங்கி நிற்கும் கொழுப்புகளும் கரைக்கப்படும். இதனால் தொப்பை மற்றும் உடல் பருமன் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து செல்லும்.

இப்பானத்தின் முழு பலனையும் பெற்றிட, துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30-60 நிமிடங்கள் உடற் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அத்துடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும்.
விரைவாக 10 கிலோ எடை குறைக்க ஓர் அற்புத பானம் | Health Tips விரைவாக 10 கிலோ எடை குறைக்க ஓர் அற்புத பானம் | Health Tips Reviewed by மருத்துவ உலகம் on December 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.