இப்படி செய்ய முடியவில்லையா? உங்களுக்கு இதய நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது | Health Tests


உங்களுக்கு இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை உங்கள் கை விரல்களைப் பயன்படுத்தி, உங்கள் கால் விரல்களை தொடுவதன் மூலம் இலகுவில் அறிந்துகொள்ள முடியும்.

எப்படி என்று கேற்கிறீர்களா?

- நேரே நின்றபடி அல்லது தரையில் அமர்ந்தபடி இதை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.
- நின்றபடி செய்த்தவதென்றால் உங்கள் இரண்டு கால்களையும் சேர்த்து சரியாக நேரே நிமிர்ந்து நில்லுங்கள்.
- அமர்ந்தபடி இதனை முயற்சிக்க வேண்டுமெனின், சமநிலையுள்ள தரையில் கால்கள் இரண்டையும் நீட்டியவாறு உட்கார்ந்துகொள்ளுங்கள்.
- இப்போது உங்கள் முழங்காலை மடக்காமல் உங்கள் இரு கைகளையும் நீட்டி கை விரல்களால், உங்கள் கால் விரல்களை தொட முயற்சி செயுங்கள்.

உங்களால் உங்கள் கால் விரல்களை தொட முடிந்தால், உங்கள் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாய்ப்பிருக்கிறது. உங்களால் அவ்வாறு தொட இயலவில்லை ஏனின், உங்கள் கை விரல்களுக்கும், கால் விரல்களுக்கும் இருக்கும் இடையில் உள்ள தூரமானது, உங்களுக்கும் உங்கள் உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் இடையிலுள்ள தூரத்தை காட்டும்.

இதனை செய்ய முடியாமல் போனால் உங்களுக்கு இதய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனினும் இதய நோய்கள் உள்ளதா, அல்லது இதய நோய்கள் ஏற்படுமா என உறுதியாகக் கூறிவிட முடியாது.

அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்கள், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை உடையவர்களால் இதனை இலகுவாக செய்ய இயலாது. இதய நோய்கள் ஏற்படுவதற்கு தேவையற்ற கொழுப்பு, அதிகரித்த உடல் பருமன், தொப்பை போன்றவையே முக்கிய காரணமாய் அமைகின்றன என்பதை நினைவில் வைத்திருங்கள்.
Previous Post Next Post