இரவில் தூக்கமின்மைக்கான சிறந்த தீர்வுகள் | Health Tips


இரவில் தூக்கமின்மை என்பது ஒரு சிலருக்கு தற்காலிகமாக விடயமாக இருக்கலாம், இன்னும் சிலருக்கு அதுவே நீண்ட கால பிரச்சினைகளாகவும் இருக்கலாம். எமது உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஓய்வினை அவை நாம் தூங்கும் போது பெற்றுக்கொள்கின்றன. மேலும், உடல் இழையங்கள் வளர தூக்கம் அத்தியாவசியமானதாகும், இன்னும் உடல் திசுக்கள் தூக்கத்தின் போது மீளமைக்கப்படுகின்றன.


மன அழுத்தம் அல்லது வழக்கத்திற்கு மாற்றமான வாழ்க்கைமுறை, சில நோய்களுக்கான மருந்து வகைளின் பாவனை என்பன உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம். தூக்கமின்மை என்பது ஓர் நீண்ட கால பிரிச்சினையாக மாறுமிடத்து, நீங்கள் கட்டாயம் வைத்தியரை நாடி முறையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பின்வரும் விடயங்களை முயற்சி செய்வதன் மூலம் இரவுத் தூக்கமின்மையில் இருந்து விடுபட அவை வழிவகுக்கும்.

உடற் பயிற்சி

உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பது தூக்கத்திற்கு மிகவும் அவசியமானதாகும். ஆய்வுகளின் படி உடற்பயிற்சி செய்யாதவர்களை விட உடற்பயிற்சி செய்பவர்கள் நீண்ட ஆழ்ந்த தூக்கத்தினை பெறுகின்றனர்.


மன அழுத்தத்தில் இருந்து விடுபடுங்கள்

மன அழுத்தம் மற்றும் உளச்சோர்வு என்பன உங்கள் தூங்கும் நேரத்தை திருடிக்கொள்ளும். தூக்கமின்மையால் அவதிப்படும் பலருரினதும் தூக்கமின்மைக்கான மறைமுகமான காரணமாக இதுவே காணப்படும். மன அழுத்தம், உளச்சோர்வு போன்றவற்றில் இருந்து விடுபட்டு நல்ல தூக்கத்தினை பெற உங்கள் மனதை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள்.

சூரிய ஒளி

இரவில் ஓய்வெடுத்துத் தூங்குவதற்கு காலை அல்லது மாலை வேளைகளில் சூரிய வெளிச்சம் சற்று உங்கள் உடலில் படுதல் ஆரோக்கியமானதாகும். இயற்கை ஒளியில் உங்கள் உடம்பு தன் கடிகாரத்தை சீர்செய்து தூங்கும் நேரத்தினை கணித்துக்கொள்ளும்.

இரவு நேர உணவுகளை முறையாக தேர்தெடுங்கள்

தூக்கத்தை விரட்டும் உணவு வகைகளை இரவில் உட்கொள்ளாதீர்கள். தூக்கத்தை தூண்டக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை இரவு நேர உணவாக உட்கொள்ளுங்கள்.

இரவு தூக்கத்திற்கு ஏதுவான வாழ்க்கைமுறையை பின்பற்றுங்கள்

இரவு நேரங்களில் தூக்கத்திற்கு செயற்கையாக ஏற்படும் இடையூறுகளை தவிருங்கள். தூங்குவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு உங்கள் கையடக்கத் தொலைபேசி / கணனி பாவனையினை நிறுத்திவிடுங்கள். தூங்கும் அறையினையும் முடிந்தவரை இருட்டாக வைத்திருங்கள். செயற்கை ஒளியானது தூக்கத்தினை வரவிடாமல்  உங்கள் மூளையினை தூண்டும்.

இரவில் அதிக சத்தம், இரைச்சல்கள் இல்லாதவறு முடியுமானவரை  தூங்குவதற்கு உகந்தவாறும், தூங்க வசதியானதாகவும் தூங்கும் இடத்தினை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
Previous Post Next Post