கொலஸ்ட்ரோல் பிரச்சினைக்கு ஒரே மாதத்தில் தீர்வு தரும் பானம் | Health Tipsஇன்றைய உலகில் துரித உணவுகளே எமது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாய் அமைகின்றன. துரித உணவுகளை உட்கொண்டு, கொலஸ்ட்ரோல் பிரச்சனையால் அதிகளவானோர் அவதியுறுகின்றனர்.

அதிகரித்த கொலஸ்ட்ரால் எதனை குறிக்கிறது?
பொதுவாகவே குளுக்கோஸ், கொலஸ்ட்ரால் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு உடலில் ஏனைய நச்சுப் பதார்த்தங்களில் அளவு அதிகரித்தல் என்பன, எமது வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் உள்ள அசாதாரணமான நிலைமைகளையே வெளிக்காட்டுகிறது. இதனையே கொலஸ்டரோலில் அளவும் மறைமுகமாக குறித்து நிற்கிறது.

ஒருவருக்கு இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, அது காலப்போக்கில் இருதய நோய்களுக்கு காரணமாய் அமைந்து, உயிருக்கே ஓர் அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது.

எமது உடலுக்கு அவசியமான கொலஸ்ட்ரோலை எமது உடலே சுயமாகவே உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனினும் நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் கொழுப்புக்கள் காணப்படின், அவை எமது உடலுக்கு பலவழிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இக்கட்டுரையில் வெறும் ஒரே மாதத்தில் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் ஓர் அற்புத பானம் பற்றி தெரிந்துகொள்வோம்.


செய்முறை:
100 கிராம் அளவில் ஓரளவு கனிந்த பரங்கிக்காயை எடுத்து, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்ஸியில் போட்டு 200 மிலி நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பருகும் முறை:
இந்த பானத்தை தினமும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு மாதம் இதனை குடித்துவர , உடலில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

பூசணி விதைகள்
பூசணி விதைகள் உடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க உதவும். அதிலும் இதில் உள்ள பைட்டோ ஸ்டெரால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மக்னீசியம் - பூசணி விதைகளில் மக்னீசியம் ஏராளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கவும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும்.

பைட்டோ ஸ்டெரால்கள் - பூசணி விதைகளில் உள்ள பைட்டோ ஸ்டெரால்கள், உணவில் உள்ள கொலஸ்ட்ரோல் உடலினால் உறிஞ்சிக்கொள்ளப்படும் வீதத்தினை குறைக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள், பூசணி விதைகளை அன்றாடம் சிறிது உட்கொள்வது சிறந்ததாகும்.
கொலஸ்ட்ரோல் பிரச்சினைக்கு ஒரே மாதத்தில் தீர்வு தரும் பானம் | Health Tips கொலஸ்ட்ரோல் பிரச்சினைக்கு ஒரே மாதத்தில் தீர்வு தரும் பானம் | Health Tips Reviewed by மருத்துவ உலகம் on December 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.