புற்று நோய் வராமல் பாதுகாக்கும் மூன்று காய்கள் | Health Tips


வெள்ளரிக்காய், பூசணிக்காய், மற்றும் தர்பூசணி ஆகிய மூன்று வகை காய்கறி/பழங்களும் புற்று நோய் வராமல் தடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் இவை புற்று நோயினை தடுப்பதாகவும் ஆராய்ச்சிகளின் முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமன்றி, இந்த மூன்றும் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

வெள்ளரிவகையை சார்ந்த இந்த மூன்று காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் இலைகள் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

வெள்ளரிவகையை சார்ந்த இந்த மூன்று காய்கறிகளிலும் உள்ள இருவகையான மரபியல் மூலக்கூறுகளும், புற்றுநோய் கலங்களை அழிக்கும் ஆற்றல் கொண்டுள்ளதாக ஆராய்ச்சிகளின் முடிவில் தெரியவந்துள்ளது.


இவற்றின் நன்மைகள்

பூசணிக்காயை அடிக்கடி உட்கொண்டு வந்தால், சிறுநீரக பிரச்சினை, உடல் வலிகள், நரம்புக் கோளாறுகள் மற்றும் இதய நோய்கள் போன்றவை எம்மை விட்டு தள்ளிப்போகும்.

தினமும் வெள்ளாரிக்காயை சாப்பிட்டு வந்தால்,  உடல் பருமன் குறைந்து, சரும ஆரோக்கியமும் பேணப்படும். அத்துடன், வெள்ளாரிக்காயை சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றமும் நீங்கிவிடும்.

தர்பூசணிக்காயை அதிகமாக சாப்பிட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, இதயம் சார்ந்த நோய்கள் வராமல் அது பாதுகாக்கும். மேலும், உடல்எடை குறைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகளில் இருந்தும் இது உடலைப் பாதுகாக்கும்.
Previous Post Next Post