உளச்சோர்வு அல்லது மனத்தளர்ச்சி என்றால் என்ன? | Depressionமனதளவில் சோர்வடைதல் என்பது பொதுவாக ஓர் இயற்கையான விடயம். சிறிது நேரத்தில் மனநிலை மீண்டும் பழைய நிலமைக்குத் திரும்பிவிடும். எனினும், இதுவே ஓர் நீண்ட நாள் நிலமையாக (2 வாரங்களுக்கு மேல்) தொடரும் எனின் அது அவசியம் மருத்துவ உதவியை நாடவேண்டிய ஓர் சுகாதாரப் பிரச்சினையாகும். மேலும் முறையான சிகிச்சை மூலம் இதில் இருந்து மீள முடியும்.

உளச்சோர்வு பொதுவாக பல்வேறுபட்ட சூழல் காரணிகளுடன் தொடர்புடைய உளரீதியான பாதிப்புக்கள் மற்றும் உணர்வு ரீதியான தாக்கங்களுக்கு உட்படும் போது மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுகிறது. 

உளச்சோர்வின் பொதுவான அறிகுறிகளாக கவலை மற்றும் ஆர்வக் குறைபாட்டினை குறிப்பிடலாம். மேலும் உளச்சோர்வின் போது ஒருவர் தன்னை எதற்கும் பலனற்றவராக, மனதில் எந்தவித எதிர்பார்ப்புகளும் அற்றவராக, தன்னை வெறுமையான மதிப்பற்ற மனிதனாக ஓர் குழப்பமான சூழ்நிலையை உணரக்கூடும். 

இதன் உச்ச கட்ட நிலமையில் ஒருவர் தன்னையே வெறுத்து ஓர் குற்ற உணர்வை உணரலாம், மேலும் மரணத்தை விரும்பலாம் அல்லது தற்கொலை எண்ணங்களுக்குத் தள்ளப்படலாம்.

உளச்சோர்வுடன் தொடர்புடைய பின்வரும் உடல் ரீதியான அறிகுறிகளும் ஏற்படலாம்.

- சோர்வு மற்றும் சுறுசுறுப்பின்மை.
- தூக்கமின்மை அல்லது அளவுக்கு மிஞ்சிய தூக்கம்.
- உடல் வலிகள்.
- தலை வலி.
- சமிபாட்டுப் பிரச்சினைகள்.
- உணவில் நாட்டமின்மை.
- உடல் எடையில் திடீர் மற்றம்.

உளச்சோர்வின் போது மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் ஒருவரின் மனநிலை மற்றும் உடல் வலி போன்ற உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உளச்சோர்வு ஒருவருடைய தினசரி வாழ்கை முறையையே மாற்றியமைக்கலாம். ஒருவரின் தொழில், உறவுகள், பொழுதுபோக்குகள் என அணைத்து விடயங்களும் பாதிப்புக்குள்ளாகலாம். 

உளச்சோர்வுடைய ஒருவரால் எந்த விடயத்திலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும், அத்துடன் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் பெரும் குழப்ப நிலையை உணர்வார். இது போன்ற நிலைமைகள் மேலும் மோசமடையும் போது அது அவருடைய உயிருக்கே பெரும் அச்சுறுத்தலாகவும் மாறலாம், அல்லது இன்னுமொருவருக்கு தீங்குவிளைவிக்கும் மனப்பான்மையை உருவாக்கலாம்.

உளச்சோர்வு யாருக்கு ஏற்படும்?

யார் வேண்டுமானாலும் உளச்சோர்வின் பாதிப்புக்குள்ளாகலாம். மற்றைய சில நோய் நிலைமைகளைப் போலவே உளச்சோர்விற்கும் பரம்பரைக்கும் இடையில் தொடர்புள்ளதாக இத்துறை சார் வள்ளலுனர்கள்நம்புகின்றனர். மேலும் ஆண்களை விட பெண்களே உளச்சோர்வினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சிகிச்சை முறைகள்:

"உளச்சோர்வுக்காக வழங்கப்படும் மருந்து வகைகள் அன்டிடிப்ரஸன்ட்ஸ் (antidepressants) என அழைக்கப்படுகின்றன."

உளச்சோர்வுக்கு மருத்துவத்தில் பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன. மருந்து மாத்திரைகள் இன்றி உடற்பயிற்சி, வாழ்கை முறையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களினால் மட்டும் கூட உளச்சோர்வினை பெருமளவில் குணப்படுத்திவிடலாம்.
உளச்சோர்வு அல்லது மனத்தளர்ச்சி என்றால் என்ன? | Depression உளச்சோர்வு அல்லது மனத்தளர்ச்சி என்றால் என்ன? | Depression Reviewed by மருத்துவ உலகம் on December 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.