இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் நாட்டு மருந்து | Health Tipsதற்போதைய உலகில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீரிழிவு நோய் 'diabetes mellitus' (சர்க்கரை நோய்) என்பது  ஒருவருடைய பரம்பரை, உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வேறு சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுகிறது.

நீரிழிவு நோய் type 1, type 2 என இருவகைப்படும், இதில் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் (gestational diabetes) எனப்படும் இன்னுமோர் நிலைமையும் உண்டு. நீரிழிவு நோய் பற்றிய விரிவான கட்டுரையில் விரைவில் அவற்றை உங்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளோம். அனைவருக்கும் பொதுவாகக் காணப்படும் இரண்டாவது வகை (type 2) பற்றியே கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுவிட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப்படலாம்.

ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முறையற்ற உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சில மருத்துவகைகளின் தொடர் பாவனை, இன்னும் சில உடற்றொழிலியல் பிரச்சினைகளை குறிப்பிடலாம்.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது தென்படும் அறிகுறிகள் மற்றும் அதனை இயற்கை முறையில் கட்டுப்படுத்த உதவும் முறை பற்றி தெரிந்துகொள்வோம்.

அறிகுறிகள்:

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால்,


- குறையாத தாகம்.
- வாய் வறட்சி.
- எந்நேரமும் பசியெடுத்தல்.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் அதிகம் சிறுநீர் கழிப்பது.
- வயிற்று பிரச்சினைகள்.
- சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு.
- நரம்பு பிரச்சினைகள்.
- மங்கலான பார்வை.
- கவனச் சிதறல்.
- நாள்பட்ட சோர்வு.

போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

இம் மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:

தண்ணீர் – 1 லிட்டர்
கிராம்பு – 60 கிராம்
பட்டை – 4 துண்டுகள்

இம் மருந்தினை தயாரிக்கும் முறை:

தண்ணீரில் கிராம்பையும், பட்டையையும் போட்டு கலந்து, குளிரூட்டியில் ஐந்து நாட்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும். ஐந்து நாட்கள் சென்ற பின் மருந்து தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

இதனை எப்போது பருக வேண்டும்?

இதன ஒவ்வொரு நாளும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மில்லி லீட்டர் பருக வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் குடித்துவர, உங்கள் உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவுவும் குறைந்துகொண்டே செல்லும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் நாட்டு மருந்து | Health Tips இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் நாட்டு மருந்து | Health Tips Reviewed by மருத்துவ உலகம் on December 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.