தொப்பையைக் குறைக்க சில எளிய உணவுகள் | Health Tipsஉடல் எடை அளவுக்கு மீறி அதிகரித்தால் உடலில் ஏற்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு அதுவே முதல் காரணமாய் அமைந்துவிடுகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனமின்மை காரணமாகவே உடல் பருமன் அதிகரிக்கிறது. முறையற்ற வாழ்கை முறை மற்றும் தகாத உணவுப் பழக்கவழக்கமே உடற் பருமனுக்கு முக்கிய காரணமாய் அமைகிறது.

இவை தவிர்ந்த பரம்பரை ரீதியான மற்றும் சில ஓமோன்களினால் ஏற்படும் மாற்றங்களாலும் உடல் எடை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உடல் எடையினால் உடலுக்கு பெரிதாக எந்தப் பாதிப்புக்களும் இல்லையெனினும், அளவுக்கு மீறிய உடல் எடை உடலுக்கு ஓர் சுமையாகவும், நோய் நிலைமைகளுக்கு முக்கிய ஓர் காரணமாகவும் அமைந்துவிடுகிறது.

அதிகரித்த உடல் எடையினை குறைக்க கீழே தரப்பட்டிருக்கும் உணவு வகைகளை சற்று முயற்சித்துப் பாருங்கள்.

பீன்ஸ்:
பீன்ஸில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. பீன்ஸில் உற்கொள்வதால் இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து காரணமாக சமிபாட்டுத் தொகுதி சீராக இயங்குவதோடு, மலச்சிக்கல் பிரச்சினைகள் ஏற்படாமலும் இது தடுக்கும். இதனால் கழிவு வெளியேற்றம் முறையாக நிகழ்ந்து, உடல் எடை குறைய அது காரணமாய் அமைகிறது.


பாதாம்:
பாதாம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். பாதாமினை நன்கு ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், இதில் காணப்படும் புரதம் மற்றும் நார்சத்து என்பன உடல் கொழுப்பை கரைக்க உதவிபுரியும்.

கொள்ளு:
கொள்ளுப்பருப்பை ஊற வைத்த நீரை பருகினால் உடலில் தேங்கிக் கிடக்கும் கெட்ட நீர் வெளியேறிவிடும். மேலும், கொழுப்புத் தன்மை எனக் கூறப்படும் ஊளைச் சதையை கணிசமான அளவிற்கு குறைக்கும் ஆற்றலையும் கொள்ளுப் பருப்பு கொண்டுள்ளது. அத்துடன், கொள்ளுப்பருப்பில் மாச்சத்து நிறையவே காணப்படுகிறது.

நாட்டு முட்டை:
முட்டை ஓர் சிறந்த நிறை உணவு. முட்டையில் புரதம், கொழுப்பு, கனியுப்புக்கள், அத்தியாவசிய வைட்டமின்கள் என பலவிதமான போசணைகள் அடங்கியுள்ளன.

தினமும் முட்டை சாப்பிட்டுவர உடல் எடை குறையும். முட்டையின் மஞ்சற் கருவில் மிக முக்கிய சத்துக்களும் உள்ளன. நாட்டு முட்டையில் கொழுப்பு இருக்குமெனினும் அவை பாதகம் தராது.

தக்காளி:
தக்காளி அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் உடன் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C இனை கொண்டுள்ளது. போதுமான அளவு தக்காளியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியபடி தக்காளியை சூப் அல்லது ஜூஸ் வடிவிலும் செய்து பருகிவரலாம். தக்காளியை போதுமான அளவில் உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் வேகமாக கரைந்து உடல் எடையும் குறையும்.

பாசிப் பயறு:
பாசிப் பயறு அதிகரித்த தொப்பையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. வயிற்றிலுள்ள கொழுப்பை குறைபதற்கு இது உதவிபுரிகிறது.  முடியுமானவரை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உடற் பயிற்சி:
மேலே குறிப்பிட்டவைக்கு மேலதிகமாக தினமும் போதுமான அளவு முறையாக உடற் பயிற்சியும் செய்ய வேண்டும்.
தொப்பையைக் குறைக்க சில எளிய உணவுகள் | Health Tips தொப்பையைக் குறைக்க சில எளிய உணவுகள் | Health Tips Reviewed by மருத்துவ உலகம் on December 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.