சளி மற்றும் மூக்கடைப்புக்கு முன்னோர்கள் தந்த ஆரோக்கிய குறிப்புகள் | Health Tips


பல வகையான நோய்களுக்கு பாரம்பரிய வைத்தியத்தில் நம் முன்னோர்களால் பல வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. சளி காரணமாக ஏற்படும் மூக்கடைப்பு மற்றும் மூச்சு திணறலை ஒரே இரவில் சரி செய்யும் அளவுக்கு பாட்டி வைத்திய முறைகளும் காணப்படுகின்றன.

கீழே அவ்வாறான சில பாரம்பரிய முறைகள் சிலவற்றை பார்க்கலாம்.

இஞ்சி:
இஞ்சி அழற்சியை (inflammation) குறைக்கும் தன்மை கொண்டது. மூக்கடைப்பிற்கு இது ஒரு மிகவும் சிறந்த நிவாரணியாகும். ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுவதால் அல்லது டீயில் சேர்த்து பருகுவதால் மூக்கடைப்பினை குணமாக்கிவிட முடியும். உடனடி நிவாரணத்திற்கு இஞ்சி மிகவும் சிறந்தது.

பூண்டு:
பூண்டில் பல வகையான மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. குறிப்பாக மூக்கடைப்பிற்கு இது மிக சிறந்த தீர்வாகிறது. மூக்கடைப்பை சரி செய்ய, பூண்டு பற்களை முழுதாக கடித்து விழுங்கலாம். அல்லது சூப் செய்து பருகலாம். பூண்டில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் தன்மை, தொற்றுகளை நீக்கி, மூக்கடைப்பை சரிசெய்கிறது.

வெங்காயம் :
வெங்காயத்தை வெட்டும் போது கண்களிலிருந்து, மூக்கிலிருந்தும் நீர் வருவதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். இதே போல், மூக்கடைப்பின் போது 5-10 நிமிடம் தொடர்ந்து வெங்காயத்தை நுகர்ந்தால், மூக்கடைப்பு சீராகி, மூச்சும் சீராகிறது.


எலுமிச்சை:
விட்டமின் C அதிகமுள்ள எலுமிச்சையில் அதிகளவு மருத்துவ குணங்கள் உள்ளன. எலுமிச்சை ஓர் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidant). இரண்டு கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை மிளகு தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகிய மூன்றையும் ஒன்றுடன் ஒன்று நன்றாகக் கலந்து, இந்த திரவத்தை மூக்கில் சில துளிகள் விடவும். சில நிமிடங்களில் மூக்கடைப்பு இல்லாமல் போய்விடும்.

நீராவி:
பலவிதமான சுவாசத் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு நீராவி பிடித்தல் ஒரு சிறந்த நிவாரணியாகும். நாட்பட்ட சளி மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு நீராவி நல்ல பலனை தருகிறது. சைனஸ் பிரச்சினையா காரணமாக தலையில் அதீத வலி ஏற்படுகிறது. நீராவி பிடிப்பதனால், தலை மற்றும் மூக்கில் அடைக்கபட்டிருக்கும் நீர் வெளியேறுகிறது.

நீராவி பிடிக்கும் பொது நீராவியை நன்றாக உள்ளிழுத்து வெளியில் விட வேண்டும். விரும்பினால் நீராவி பிடிக்க முன் புதினா போன்ற எதாவது ஒரு வகை மூலிகையை தண்ணீரில் இட்டு தண்ணீரை கொதிக்கவைத்துக்கொள்ளலாம். இதனால் இரட்டிப்பான பலன் கிடைக்கும்.

துளசி:
துளசி இலை அதிகளவில் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. துளசி இலைகள் சிலவற்றை எடுத்து, கழுவி, வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். காலை உணவிற்கு முன் இதனை எடுத்துக் கொள்வது நல்லது. காலையில் டீயுடன் சில துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து பருகுவது நல்லது. இதனால் மூக்கடைப்பு முற்றிலும் இல்லாமல் போகும்.

உடனடி நிவாரணத்திற்கு மேலே கூறிய குறிப்புகளை உபயோகித்து பக்க விளைவுகள் இல்லாமல், மூக்கடைப்பை வீட்டிலேயே சரிசெய்யலாம்.
Previous Post Next Post