இளமையான தோற்றத்தை பெற உதவும் சில உணவு வகைகள் | Health Tips
1. ஆனைக்கொய்யா

ஆனைக்கொய்யா மிகவும் சுவையான ஓர் உணவாகும் மற்றும் இதில் பல வகைகளும் உண்டு.

ஆனைக்கொய்யாவில் உடல் நலத்திற்கு பாதகம் விளைவிக்காத கொழுப்பு காணப்படுகிறது. அத்துடன் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனியுப்புக்களை இது அதிகளவில் கொண்டுள்ளது.

மேலும், ஆனைக்கொய்யாவில் polyhydroxylated fatty alcohols எனப்படும் ஓர் தனித்துவமான சேர்வை காணப்படுகிறது. இது தோலில் ஏற்படும் அழற்சிகளுக்கு எதிராக போராட வல்லது. சூரிய ஒளியில் இருந்து தோலை பாதுகாப்பதோடு பாதிப்படைந்த DNA களையும் இது மீளமைக்கிறது.

2. எக்ஸ்ட்ரா வேர்ஜின் ஆலிவ் எண்ணெய் (Extra Virgin Olive Oil)Extra-virgin ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்பு காணப்படுகிறது. ஆய்வுகளின் படி Extra-virgin ஆலிவ் எண்ணெய் மனிதனின் வயதாதலுடன் ஏற்படக்கூடிய பல பொதுவான நோய் நிமைகளை தடுக்கிறது.

மேலும், இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.


ஆலிவ் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு இளமையான தோற்றத்தினை வழங்குகிறது. ஆய்வுகளின் படி, இது தோலில் ஏற்படும் அழற்சியினை குறைக்க உதவுகிறது, மேலும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

3. மாதுளை


மாதுளை பல ஆரோக்கியமிக்க நன்மைகளைக் கொண்டுள்ளது. மாதுளை கிறீன் டீயை விட அதிகளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்களை கொண்டுள்ளது. இதனால் உடலில் காணப்படும் தேவையற்ற நச்சுக்களை இது வெளியேற்றும்.

மாதுளை அழற்சியை குறைகிறது  மற்றும் நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது. பெருங்குடல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு மாதுளை சிறந்த பலனைத் தரும். மேலும் இவை சூரிய ஒளியின் பாதிப்புக்களில் இருந்து தோலை பாதுகாக்கிறது, அத்துடன் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.


4. ஆளி விதைகள் (Flaxseeds)ஆளி விதைகள் அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. இவை உடலில் காணப்படும் கொலஸ்டரோலின் அளவை குறைக்கிறன்றன.

ஆளி விதைகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், இன்சுலின் உற்பத்தியையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றன. மேலும் இவை விதைப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தினை குறைகின்றன.

ஆளி விதைகளில் அதிகளவில் omega-3 fatty acid காணப்படுகிறது. இது சூரிய ஒளியினால் தோலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. 
இளமையான தோற்றத்தை பெற உதவும் சில உணவு வகைகள் | Health Tips இளமையான தோற்றத்தை பெற உதவும் சில உணவு வகைகள் | Health Tips Reviewed by மருத்துவ உலகம் on January 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.