உயர் இரத்த அழுத்தத்தை (BP) கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் பானம் | Health Tips


ஹைப்பர்டென்சன் அல்லது பொதுவாக BP என அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தம் என்பது இன்று ஓர் பொதுவான நோய் நிலமையாக மாறிவிட்டதது. பொதுவாகவே 40 வயதினை தாண்டிய பலருக்கும் இப்பிரச்சினை உள்ளது. ஆண், பெண் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் இதன் பாதிப்புக்குள்ளாகலாம். மேலும், இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி 40 வயதுக்கு குறைந்தவர்களிலும் சிலருக்கு BP உள்ளது.

முறையற்ற உணவுப் பழக்கவழக்கம், புகைத்தல், மது அருந்துத்தல், உணவில் அதிக உப்பு சேர்த்தல் மற்றும் இன்னும் பல காரணிகள் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் (BP) ஏற்படுவதற்கான காரணமாக அமைகின்றன. உயர் இரத்த அழுத்தம் என்பது இதயத்துடன் தொடர்புடைய நோய் நிலைமை என்பதால், இது சிலவேளைகளில் உயிரச்சுரத்தலையும் ஏற்படுத்தக்கூடிய நோய் நிலைமையாகும்.

உயர் இரத்த அழுத்தத்தை (BP) கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் வீட்டில் தயாரிக்கக்கூடிய ஓர் அற்புத இயற்கை மருந்து பற்றி இங்கே பார்க்கலாம்:

தேவையான பொருட்கள்: 
- தேன்.
- வெங்காயம்.

செய்முறை:
வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி அரைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது, வெங்காய சாற்றை ஒரு கரண்டியளவில் எடுத்து அதற்கு ஒரு கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள். இதனை தினமும் காலை மாறும் மாலை அருந்துங்கள்.

இதனால் BP கட்டுப்பாட்டில் இருக்கும். 3-4 நாட்கள் தொடர்ந்து இதனை காலை, மாலை அருந்திய பின்னர் வைத்தியரை நாடி உங்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதித்துப் பாருங்கள்.

இதனை நீங்கள் வீட்டிலே முயற்சி செய்து பாருங்கள். உங்கள் அனுபவத்தை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ள மறவாதீர்கள்.
Previous Post Next Post