இந்த உணவுகள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் ஆபத்தானவை..!


நீங்கள் ஒரு கர்பிணிப் பெண் எனின் அல்லது குழந்தை எதிர்பார்ப்புடன் இருக்கும் ஒரு பெண் எனின் நீங்கள் உண்ணும் உணவுகள் பற்றி கட்டாயம் அவதானமாக இருக்க வேண்டும். காரணம், முன்னரைப் போலன்றி நீங்கள் உங்கள் வயிற்றில் வளரும் குட்டிப் பாப்பா பற்றியும் நீங்கள் கவனமாக இருத்தல் வேண்டும். நீங்கள் உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் சேர்த்தே உணவு உட்கொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தில் அல்லது குழந்தை எதிர்பார்ப்புடன் இருக்கும் காலங்களில் நீங்கள் உணவு உட்கொள்ளும் போது முன்னரை போல அன்றி சில உணவுகளை தவிர்க்க வேண்டும். முக்கியமாக உங்கள் கருவுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை நீங்கள் உண்ணவே கூடாது. அது நீங்கள் விரும்பி உண்ணும் உணவாக இருந்தாலும் சரியே. உங்கள் குட்டிப் பாப்பாக்காக நீங்கள் அவற்றை தவிர்த்தே தான் ஆக வேண்டும்.

இவ்வாறு கர்ப்பகாலத்தில் நீங்கள் உண்ணக்கூடாத, உங்கள் கருவுக்கு கூட ஆபத்துவிளைவிக்கும்  சில உணவுகள் பற்றி கீழே பார்க்கலாம்.

1. அன்னாசி

கர்ப்ப காலங்களின் நீங்கள் அன்னாசிப் பழத்தை உண்ணவே கூடாது. குழந்தை எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கும் கட்டாயம் இதை தவிர்க்க வேண்டும். நீங்கள் கருவுற்றிருப்பதை அறிந்ததும் வைத்தியர்கள் உங்களுக்கு சில ஆலேசனைகளை வழங்கக் கூடும். அதில் முக்கியமாக  அன்னாசிப் பழத்தை தவிர்க்குமாறும் கூறுவார்கள். அன்னாசியில் காணப்படும் bromelain எனும் பதார்த்தமே இதற்கு காரணமாகும். இதனால் தான் அன்னாசியை சிலர் இன்றளவிலும் இயற்கை முறை கருக்கலைப்புக்காக உட்கொள்கின்றனர்.


2. பப்பாளி

அன்னாசியை போன்றே நீங்கள் தவிர்க்க வேண்டிய இன்னுமொரு பழம் இந்த பப்பாளி தான். அதிலும் முக்கியமாக கர்ப்பகாலத்தில் முதல் கட்டங்களில் பப்பாளியை நீங்கள் உட்கொள்ளவே கூடாது. பப்பாளியில் காணப்படும் கருவைக் கலைக்கக்கூடிய சில நொதியங்களே (enzymes) இதற்கு முக்கிய காரணமாகும்.


3. முருங்கை

நீங்கள் முருங்கை காய், முருங்கை கீரை என்பவற்றை விரும்பி உண்பவர் எனின், கர்ப்ப காலத்திலும், குழந்தை எதிர்பார்க்கும் காலங்களிலும் முருங்கை தாவரத்தை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இதற்குக் காரணம் முருங்கையில் அடங்கியிருக்கும் alpha-sitosterol எனும் கர்ப்பத்துக்கு தீங்கு விளைவிக்கும் பதார்த்தமேயாகும்.

4. காப்பி

நீங்கள் அடிக்கடி காப்பி குடிக்கும் பழக்கத்தை உடையவர் எனின் கர்ப்ப காலங்களில் காப்பி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காப்பியில் காணப்படும் caffeine உடலில் ஈரத் தன்மையை குறைக்கும் மற்றும் கால்சியத்தின் அளவையும் குறைக்க வல்லது. மேலும் சிலவேளைகளில் caffeine உடலில் ஏற்படும் நோய் அறிகுறிகளையும் மறைத்துவிடக்கூடியது. இவ்வாறான பிரச்சினைக்களால் பாரம் குறைந்த குழந்தைகள் பிறக்கவும் இது காரணமாகிவிடுகிறது. 

5. டின் மீன்

கற்பகாலங்களில் டின் மீன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். டின் மீனில் காணப்படும் listeria எனும் பக்டீரியா உங்கள் கர்ப்பத்தை இல்லாமல் செய்துவிடக்கூடும்.

6. க்ரீன் டீ

காப்பியை போலவே நீங்கள் கர்ப்ப காலத்தில் க்ரீன் டீயையும் தவிர்க்க வேண்டும். க்ரீன் டீயில் அதிகளவில் caffeine காணப்படுகிறது. இது உங்கள் கர்ப்பத்துக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் இதனால் குழந்தை பிறந்ததன் பின்னர் பால் சுரத்தலும் குறைந்துவிடும்.
Previous Post Next Post