தொடர் சளி, வறட்டு இருமலை வெறும் 3 நாட்களில் குணமாக்கும் நாட்டு மருந்து | Health Tips


தொடர் சளி மற்றும் வறட்டு இருமல் போன்றவை அன்றாட வாழ்வில் பல அசௌகரியங்களை ஏற்படுத்தும். பொதுவாக குளிர்காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு இதுபோன்ற நோய் நிலைமைகள் ஏற்படும். இலேசான சளி மற்றும் இருமல் தானாகவே குணமாகிவிடும் எனினும் நாள்பட்ட தொடர் சளி மற்றும் இருமல் சிலவேளைகளில் மருந்து மாத்திரைகளுக்குகூட கட்டுப்படாமல் நீண்ட நாட்களுக்கு பெரும் சிரமத்தை உண்டுபண்ணும்.

தொடர் இருமல், நாள்பட்ட சளி என்பவை சிலவேளைகளில் சுவாசத் தொகுதி தொடர்பான பிரச்சினைகளின் வெளிப்பாடாகக்கூட  இருக்கலாம். எனவே முதலில் வைத்தியரை அணுகி அவ்வாறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளனவா என உங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும், அதற்கான முறையான சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இங்கே தொடர் சளி மற்றும் வறட்டு இருமல் போன்றவை வெரும் 3 நாட்களில் விரட்டியடிக்கக்கூடிய ஒரு நாட்டு மருந்து பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- 1 டம்ளர் தண்ணீர்.
- 1 டம்ளர் பால்.
- 10 உரித்த பூண்டு பற்கள்.
- மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்.
- மிளகு பொடி 1/2 டீஸ்பூன்.
- பனங்கல்கண்டு 1 டீஸ்பூன்.

செய்முறை:
பால் மற்றும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் உற்றி அதனுள் பூண்டுப் பற்களை இட்டு அடுப்பில் நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். 10 பூண்டுப் பற்களும் நன்றாக வேகும் வரை கொதிக்கவைக்க வேண்டும். அப்போது தான் பூண்டில் உள்ள சத்துக்கள் பாலில் கலக்கும்.

நன்றாக கொதித்த பின்னர் 1/2  டீஸ்பூன் மிளகு பொடி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலக்கி மீண்டும் இலேசாக கொதிக்கவைக்க வேண்டும். ஒரு கரண்டியை உபயோகித்து வேகவைத்த பூண்டு பற்களை பாலுடன் இன்னும் சற்று கரையும் வரை நன்றாக நசுக்க வேண்டும்.

பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி இந்த கலவையை ஒரு கிளாசில் அல்லது உங்கள் விருப்படி ஒரு கப்பில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இத்தனுள் 1 டீஸ்பூன் பனங்கல்கண்டை இட்டு நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். குடிக்க முடியுமான அளவுக்கு ஆறிய பின்னர் இதனை பருக வேண்டும்.

தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் இதை செய்து பருக வேண்டும். இதை தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தினால் போதும், உங்கள் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, இதுவரை கரையாமல் இருந்த நெஞ்சு சளி எல்லாம் வெளியாகிவிடும். அத்துடன் 3 நாட்களில் வறட்டு இருமலும் குறைந்து இல்லாமல் போய்விடும்.
Previous Post Next Post