சிறுநீரக நோயின் அறிகுறிகள்!


எமது உடலில் இரண்டு சிறுநீரகங்கள் காணப்படுகின்றன. சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டும் தொழிலை செய்கின்றன. இதனால் எமது இரத்தத்தில் காணப்படும் கழிவுகள், உடலுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய நச்சுப் பதார்த்தங்கள் மற்றும் மேலதிக நீர் சிறுநீராக அகற்றப்படுகிறது.

சிறுநீரகங்கள் சரிவர தொழிற்படாவிட்டால் இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் முறையாக வெளியேற்றப்படாமல் அவை இரத்தத்தில் தங்கி உடலுக்கு பாதிப்பு விளைவிக்கலாம். மேலும் சிறுநீரகங்களால் வெளியேற்றப்படாத நீர் மற்றும் திரவங்கள் உடல் பாகங்களில் சேர்ந்து வீக்கத்தையும் உண்டுபண்டும்.

சிறுநீரக நோயினை (பொதுவாக நாள்பட்ட சிறுநீரக நோய் - Chronic Kidney Disease) அதன் தன்மையினை பொருத்து 5 நிலைகளுக்கு (Stages) வகைப்படுத்தப்படுகிறது. அவை Stage 1, Stage 2, Stage 3, Stage 3, Stage 4,  Stage 5 எனப்படுகின்றன.

இதில் Stage 4 மிக உக்கிர நிலையாகவும் (severe),  Stage 5 இறுதி நிலையாகவும் (End-Stage) ஆகவும் கருதப்படுகிறது. இறுதி நிலை சிறுநீரக நோய் End-Stage Renal Disease (ESRD) என அழைக்கப்படுகிறது.


இறுதி நிலை சிறுநீரக நோயின் போது டயாலிசிஸ் (Dialysis) எனப்படும் இரத்த சுத்தீகரிப்பு கட்டாயமாகிறது. இதன் போது இரத்தில் உள்ள கழிவுகளும், நச்சுப் பதார்த்தங்களும் இயந்திர உதவியுடன் செயற்கை முறையில் வெளியேற்றப்படுகிறது.

சிறுநீரக நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள் (Risk Factors):
 • சர்க்கரை நோய், மோசமான கட்டுப்பாடு.
 • சிறுநீரகம் சார்ந்த வேறு பிரச்சினைகள்.
 • உயர் இரத்த அழுத்தம்.
 • புகையிலை பயன்பாடு.
 • வயதாதல்.

சிறுநீரக நோயின் அறிகுறிகள்:
 • சிறுநீர் கழிக்கும் அளவில் மாற்றம்.
 • உடலில் தசை பிடிப்பு, தசை வலி.
 • கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுதல்.
 • தொடர் அரிப்பு.
 • நெஞ்சு வலி (இதயத்தின் விளிம்புகளில் திரவம் சேரும் போது). 
 • மூச்செடுத்தலில் சிரமம் (நுரையீரலில் திரவம் சேரும் போது).
 • கட்டுப்படுத்தவே முடியாத உயர் இரத்த அழுத்தம்.
 • உள தொழிற்பாடு மந்தமடைதல்.
 • குமட்டல் மற்றும் வாந்தி.
 • சாப்பாட்டில் விருப்பமின்மை.
 • உடல் சோர்வு, பலவீனம்.
 • தூக்கப் பிரச்சினைகள்.

சிறுநீரக நோயுடன் தொடர்புடைய நோய் அறிகுறிகள் வேறு நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்துப்போவதால், இவ்வறிகுறிகள் தென்பட்ட உடனேயே அது சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள் என கூறிவிட முடியாது. இதற்காக ஒரு மருத்துவரை அணுகி உங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். 

மருத்துவத்தில் சிறுநீரகங்கள் பற்றி கற்கும் துறை Nephrology எனவும், இத்துறையில் தேர்ச்சிபெற்ற மருத்துவர்கள் Nephrologists எனவும் அழைக்கப்படுகின்றனர்.
Previous Post Next Post